Viral Video: ”ஒரு கூட்டு கிளியாக”... எம்.எஸ்.தோனிக்கு எதிராக விராட், ஃபாஃப்: தெறிக்கும் மீம்ஸ்கள்..!
எம்.எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ஃபாப் டு பிளெசிஸ் தொடர்பான மீம் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காமெடியான வீடியோக்கள் இதோ!
ஐபிஎல் 2024ன் 68வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு பெங்களூரு அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றனர். மேலும், கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் முதல் விராட் கோலி வரை அனைத்து அணி வீரர்களின் முகத்திலும் அத்தனை சந்தோஷம். இவர்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமானவர்கள்.
விராட் கோலியும், ஃபாப் டு பிளெசிஸும் எம்.எஸ்.தோனியின் தலைமையின் கீழ் விளையாடியவர்கள். கிட்டதட்ட இவர்கள் இருவரும் தன் தலைவனுக்கு எதிராக விளையாடி வெற்றிபெற்றவர்கள். வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதைபோல் இருவரும் பாய்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தினர்.
இந்தநிலையில், எம்.எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ஃபாப் டு பிளெசிஸ் தொடர்பான மீம் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த காமெடியான வீடியோக்கள் இதோ!
ஒரு கூட்டு கிளியாக....... 😃#RCBvsCSK pic.twitter.com/EPMmfoiWXE
— black cat (@Cat__offi) May 18, 2024
Thala vs king 😻😅#CSKvsRCB pic.twitter.com/NZWCmJ0r48
— black cat (@Cat__offi) May 17, 2024
RCB 🔥❤pic.twitter.com/XXNeLU23u4
— Devendran Palanisamy (@devpromoth) May 17, 2024
MS Dhoni is perhaps the unluckiest cricketer when it comes to having a proper farewell 🥲💔 pic.twitter.com/e1FxgFnyjz
— Hail Prabhas (@HailPrabhas007) May 18, 2024
match day😊#RCBvsCSK pic.twitter.com/4OE4XogzcW
— black cat (@Cat__offi) May 18, 2024
#CSKvsRCB pic.twitter.com/lPtkNxFa0m
— Brendon 𝕏 (@Esalacupnamdea) May 18, 2024
போட்டி சுருக்கம்:
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 218/5 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு, பிளேஆஃப்களுக்குச் செல்ல, பெங்களூரு சென்னை சூப்பர் கிங்ஸை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதில் பெங்களூரு அணி, சென்னை அணியை 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.