CSK Vs LSG LIVE SCORE: 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.
LIVE
Background
ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக சென்னையில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் 39 வது லீக் இன்று (ஏப்ரல் 23) நடைபெறுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
முன்னதாக இந்த 17வது சீசனில் சி.எஸ்.கே மற்றும் லக்னோ அணிகள் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மோதின. இதில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது.
புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் 4 வெற்றி பெற்றுள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி நான்காவது இடத்தில் உள்ளது. அதேசமயம் லக்னோ அணி 5வது இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் நடந்துள்ளன. இதன்போது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேசமயம் லக்னோ அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்):
குயின்டன் டி காக், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர் - கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):
அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா
CSK Vs LSG LIVE SCORE: சென்னையை வீழ்த்திய லக்னோ!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ அணி.
CSK Vs LSG LIVE SCORE: 19 ஓவர்கள் முடிந்தது!
19 ஓவர்கள் முடிந்த நிலையில் 194 ரன்கள் எடுத்துள்ளது லக்னோ அணி.
CSK Vs LSG LIVE SCORE: 18 ஓவர்கள் முடிந்தது!
18 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி179 ரன்கள் எடுத்துள்ளது.
CSK Vs LSG LIVE SCORE: மார்கஸ் ஸ்டோனிஸ் சதம் விளாசினார்!
லக்னோ வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சதம் விளாசி இருக்கிறார்.
CSK Vs LSG LIVE SCORE: 17 ஓவர்கள் முடிந்தது!
17 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 164 ரன்கள் எடுத்துள்ளது.