IPL Commentators: ஐபிஎல் தொடரை தமிழில் யார் தொகுத்து வழங்கறாங்க? ஸ்டார்களை லிஸ்ட் போட்ட ஜியோ சினிமா!
ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர்கள் யார் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக ஜியோ சினிமா அறிவித்துள்ளது.
இந்தியாவின் விருப்பமான விளையாட்டு திருவிழாவான டாடா ஐபிஎல் 2024 தொடரை ஜியோ சினிமா ரசிகர்களுக்காக ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, போஜ்புரி, பஞ்சாபி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம், ஹரியான்வி ஆகிய 12 மொழிகளில் இலவசமாக வழங்குகிறது.
நாளை முதல் தொடங்கும் 17வது சீசன் ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர்கள் யார் யார் என்பதை ஜியோ சினிமா வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் மொழியில், அபினவ் முகுந்த், ஆர் ஸ்ரீதர், சுதிர் சீனிவாசன், பகவதி பிரசாத், வித்யுத் சிவராமகிருஷ்ணன், பாபா அப்ரஜித், பாபா இந்திரஜித், அனிருதா ஸ்ரீகாந்த், கேபி அருண் கார்த்திக், சமீனா அன்வர், அஷ்வத் போபோ உள்ளிட்டோர் வர்ணனையாளர்களாக செயல்படவுள்ளனர்.
அதேபோல் ஆங்கிலத்தில், “கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன், இயான் மோர்கன், பிரட் லீ, மைக் ஹெசன், அனில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா, கிரேம் ஸ்மித், ஸ்காட் ஸ்டைரிஸ், சஞ்சனா கணேசன், சுஹைல் சந்தோக்” உள்ளிட்ட முன்னாள் ஐபிஎல் வீரர்கள் வர்ணனை செய்யவுள்ளனர்.
வர்ணணை குழு பட்டியல்
மொழி |
பெயர்கள் |
ஆங்கிலம் |
கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன், இயான் மோர்கன், பிரட் லீ, மைக் ஹெசன், அனில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா, கிரேம் ஸ்மித், ஸ்காட் ஸ்டைரிஸ், சஞ்சனா கணேசன், சுஹைல் சந்தோக்.
|
ஹிந்தி |
ஜாகீர் கான், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, ஆகாஷ் சோப்ரா, நிகில் சோப்ரா, சபா கரீம், அனந்த் தியாகி, ரிதிமா பதக்.
|
மராத்தி |
கேதர் ஜாதவ், தவால் குல்கர்னி, கிரண் மோர், சித்தேஷ் லாட், பிரசன்னா சாந்த், சைதன்யா சாந்த், குணால் டேட்.
|
குஜராத்தி |
அஜய் ஜடேஜா, மன்பிரீத் ஜுனேஜா, ராகேஷ் படேல், பார்கவ் பட், ஷெல்டன் ஜாக்சன், அதுல் பெடடே, ஆர்ஜே அசீம்
|
போஜ்புரி |
ரவி கிஷன், முகமது சைஃப், சிவம் சிங், சத்ய பிரகாஷ், குலாம் ஹுசைன், சவுரப் குமார், விஷால் ஆதித்யா சிங், ஷாலினி சிங், சுமித் குமார், அசுதோஷ் அமன்.
|
பெங்காலி |
ஜூலன் கோஸ்வாமி, சுபோமோய் தாஸ், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, அனுஸ்துப் மஜும்தார், சஞ்சீப் முகர்ஜி, சரதிந்து முகர்ஜி, அனிந்த்யா சென்குப்தா, டெபி சாஹா.
|
ஹரியான்வி |
வீரேந்திர சேவாக், மன்விந்தர் பிஸ்லா, சோனு ஷர்மா, ஆர்ஜே கிஸ்னா, ரவின் குண்டு, ப்ரீத்தி தஹியா.
|
மலையாளம் |
சச்சின் பேபி, ரோஹன் பிரேம், ராய்பி கோம்ஸ், சோனி செருவத்தூர், மனு கிருஷ்ணன், வி.ஏ.ஜெகதீஷ், எம்.டி.நிதிஷ், அஜு ஜான் தாமஸ், ரேணு ஜோசப், பினோய். |
கன்னடம் |
எஸ் அரவிந்த், அமித் வர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹெச்எஸ் ஷரத், பாரத் சிப்லி, சுஜய் சாஸ்திரி, ராகவேந்திர ராஜ், சுமந்த் பட், ரீனா டி’சோசா, கே ஸ்ரீனிவாஸ் மூர்த்தி, வி கவுஷிக், அங்கிதா அமர்.
|
தமிழ் |
அபினவ் முகுந்த், ஆர் ஸ்ரீதர், சுதிர் சீனிவாசன், பகவதி பிரசாத், வித்யுத் சிவராமகிருஷ்ணன், பாபா அப்ரஜித், பாபா இந்திரஜித், அனிருதா ஸ்ரீகாந்த், கேபி அருண் கார்த்திக், சமீனா அன்வர், அஷ்வத் போபோ.
|
தெலுங்கு |
ஹனுமா விஹாரி, வெங்கடபதி ராஜு, அக்சத் ரெட்டி, ஆஷிஷ் ரெட்டி, சந்தீப் பவனகா, கல்யாண் கொல்லரபு, ஆர்ஜே ஹேமந்த், பிரத்யுஷா, ஆர்ஜே கௌஷிக், சுனிதா ஆனந்த்.
|
பஞ்சாபி |
சரந்தீப் சிங், ராகுல் சர்மா, விஆர்வி சிங், ரீதிந்தர் சிங் சோதி, சேத்தன் சர்மா, சுனில் தனேஜா, குர்ஜித் சிங், பால்ராஜ் சைல்.
|
ஹேங்கவுட் |
விபுல் கோயல், அங்கத் சிங் ஆர், ஆதித்யா குல்ஸ்ரேஸ்தா, இந்தர் சஹானி, ஆஷிஷ் சோலங்கி, ஷஷி திமான், குணால் சலுஜா. |