IPL 2023: டெல்லி கேபிடல்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்..? போட்டா போட்டியில் மூன்று முன்னாள் கேப்டன்கள்..!
பண்ட் குணமடைய நான்கு மாதங்களுக்கும் மேலாகும் என்றும், விளையாடுவதற்கு சுமார் 6 மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனுமான ரிஷப் பண்ட் கடந்த 30ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கலே நகரில் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தை தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து விமானம் மூலம் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் ரிஷப்பண்ட்:
முன்னதாக முதற்கட்ட சிகிச்சைக்குபிறகு ரிஷப் பண்ட்க்கு நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு உடனடியாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து, கால் முட்டு மற்றும் கணுக்காலில் பலத்த காயம் இருந்தநிலையில், ரிஷப் பண்ட்டுக்கு முழங்காலில் நேற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ள அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இதையடுத்து, பண்ட் குணமடைய நான்கு மாதங்களுக்கும் மேலாகும் என்றும், விளையாடுவதற்கு சுமார் 6 மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் தொடங்கவுள்ளதால் அடுத்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரிஷப் பண்ட்டுக்கு கேப்டன் திறமை இருப்பதை கண்டறிந்ததே டெல்லி நிர்வாகம்தான். கடந்த 2021 ம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து விலகியபோது, டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார்.
1. டேவிட் வார்னர்
இந்த ஐபில் தொடரில் பண்ட் விளையாடுவது சாத்தியமில்லாததால் அணியின் கேப்டன் பொறுப்பை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரிடம் ஒப்படைக்க டெல்லி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக இருந்த அனுபவம் டேவிட் வார்னருக்கு இருந்ததால் அணி நிர்வாகம் முழுமையாக நம்புகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக வார்னர் சிறப்பாக செயல்பட்டார். அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பையையும் கொடுத்தார். இந்நிலையில், டெல்லி நிர்வாகம் இன்னும் சில நாட்களில் அவரைத் தொடர்பு கொண்டு அணியில் பொறுப்பேற்க சொல்லலாம்.
2. பிரித்வி ஷா
டெல்லி கேபிடல்ஸ் அணியில் பிருத்வி ஷாவின் பெயர் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரிஷப் பண்ட் காயம் காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாகும் அதிகாரம் உள்ளது. ப்ரித்வி ஷா ஐபிஎல்-ல் கேப்டனாக இருந்ததில்லை என்றாலும், 2018 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அவரது தலைமையில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. அத்தகைய சூழ்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியில் பந்த் இல்லாத நிலையில் அவரை கேப்டனாக்கலாம்.
3. மிட்செல் மார்ஷ்
ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் மிட்செல் மார்ஷ் மூன்றாவது இடத்தில் உள்ளார். 17 வயதில் ஆஸ்திரேலியாவுக்காக உள்நாட்டுப் போட்டியில் அறிமுகமானவர். 2010 ஆம் ஆண்டில், மிட்செல் ஆஸ்திரேலியாவின் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ், அவர் ஆஸ்திரேலியாவுக்கு 19 வயதுக்குட்பட்ட அணி பட்டத்தை வென்றார். இவரின் சிறப்பான ஆட்டத்தை பார்த்தால், அணி அவரை கேப்டனாகவும் ஆக்கலாம்.
டெல்லி அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்..?
டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் மிக முக்கியமான வீரர். கேப்டனாக மட்டுமின்றி, சிறந்த விக்கெட் கீப்பராகவும் பண்ட் பணியாற்றியுள்ளார். தற்போது பண்ட் இல்லாததால், யாரை நம்பி கீப்பிங் பொறுப்பு வழங்குவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதையடுத்து சர்பராஸ் கானிடம் இந்த விக்கெட் கீப்பர் பொறுப்புகளை ஒப்படைக்க டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் யோசித்து வருகிறது.
பண்ட் இல்லாததால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாகும் வாய்ப்பு உள்ளது. இந்த சீசனில் இருந்து தொடக்க ஆட்டக்காரராக அனுப்பப்படுவார் என்று செய்திகள் வந்தாலும், இதுவரை டெல்லி கேபிடல்ஸ் மிடில் ஆர்டரின் சுமையை பண்ட்தான் சுமந்துள்ளார். இப்போது அவர் இல்லாத நிலையில், கடந்த சீசனில் இந்தியாவுக்காக அண்டர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற யஷ் துலுக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம்.