Kohli in IPL: சாதனை மன்னன் விராட் கோலி இம்முறை படைக்கவுள்ள சாதனைகள்.. இதோ முழு விபரம்..!
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட்கோலி இம்முறை பல்வேறு சாதனைகளைப் படைக்கவுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட்கோலி இம்முறை பல்வேறு சாதனைகளைப் படைக்கவுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நாளை தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொள்ளவுள்ளன.
இந்நிலையில் விராட் கோலி இந்த அண்டு மூன்று சாதனைகளை படைக்கவுள்ளார். அது குறித்து காணலாம். ஐபிஎல் போட்டியில் தான் அறிமுகமானது முதல் இதுவரை ஒரே அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, தான் விளையாடும் பெங்களூரு அணியின் ஒரு அங்கமாக இருந்து அணியின் கேப்டனாக வளர்ந்து தற்போது முக்கிய வீரராக உள்ளார். இவர் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் இதுவரை யாரும் படைக்காத சாதனைகளை படைக்கவுள்ளார்.
அதிக கேட்ச்
விராட் கோலி இதுவரை 93 கேட்ச்களை பிடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள போட்டித் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் 14 லீக் போட்டிகள் உள்ளதால், விராட் கோலி 100 கேட்ச்களை எட்ட மீதமுள்ள 7 கேட்ச்களை எட்டுவார். அதிலும் குறிப்பாக இவருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 97 கேட்களைப் பிடித்து முதல் இடத்தில் உள்ளார்.
அதிக சதம்
ரன் மிஷின் எனப்படும் விராட் கோலி இதுவரை 5 சதங்களை விளாசியுள்ளார். 2016ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தினை விளாசியிருந்தார். அதன் பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஒரு சதம் கூட அவர் விளாசவில்லை. அதின் பின்னர், 2019ஆம் ஆண்டு சீசனில் மட்டும் 4 சதங்களை பறக்கவிட்டு இருந்தார். மொத்தம் ஐந்து சதங்களை விளாசியுள்ளா விராட் இம்முறை தனது நண்பரான கெயில் சாதனையுடன் சமன் செய்வார் அல்லது அவரை விட கூடுதலாகவும் சதம் விளாச வாய்ப்புகள் உள்ளது. கெயில் 6 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக ரன்கள்
ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி இருந்தாலும், தற்போது 7 ஆயிரம் ரன்கள் குவிக்கவுள்ளார். அவர் தற்போது, 6,624 ரன்கள் எடுத்துள்ளார். 7 ஆயிரம் ரன்களை எட்டவுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஷிகர் தவான் 6, 244 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஏற்கனவே 196 போட்டிகளில் 6 ஆயிரம் ரன்கள் குவித்து, குறைந்த இன்னிங்ஸில் 6 ஆயிரன்களை எட்டியவர் என்ற புகழையும் அவர் பெற்றார், என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க,
IPL 2023: ஜடேஜா சிஎஸ்கேவை விட்டு வெளியேற தோனிதான் காரணமா? நடந்தது என்ன?
மேலும் படிக்க,