MI vs PBKS, Match Highlights: இஷான் - சூர்யகுமார் மிரட்டல் அடி..பந்துவீச்சில் சொதப்பிய பஞ்சாப்..மும்பை அபார வெற்றி
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா டக்-அவுட்:
மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. மும்பை அணி கேபன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
கேமரூன் கிரீன் - இஷான் கிஷன் கூட்டணி:
இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேமரூன் கிரீன் மற்றும் இஷான் கிஷன் கூட்டணி பொறுப்புடன் விளையாடி மும்பை அணியை சரிவிலிருந்து மீட்டது. சீரான இடைவெளியில் சிக்சர் மற்றும் பவுண்டரிகலை விலாசினர். இதனால், 54 ரன்கலை சேர்த்தது. தொடர்ந்து, 23 ரன்கள் சேர்த்து இருந்தபோது கேமரூன் கிரீன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இஷான் கிஷன் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி:
இதையடுத்து வந்த சூர்யகுமார் யாதவும், இஷான் கிஷன் உடன் சேர்ந்து சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து பவ்யுண்டரிகளை விளாச 29 பந்துகளில் இஷான் கிஷான் நடப்பு தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் மும்பை அணியும் 100 ரன்களை கடந்தது. மறுமுனையில் நாலாபுறமும் சிக்சர்களாக விளாசிய சூர்யகுமார் யாதவ் வெறும் 23 பந்துகளில் 50 ரன்களை கடந்து மிரட்டினார். இந்த கூட்டணி வெறும் 52 பந்துகளில் 100 ரன்களை சேர்த்தது.
சூர்யா & இஷான் அவுட்:
பஞ்சாப் அணிக்கு பெரும் தலைவலியை கொடுத்த சூர்யகுமார் யாதவ் 66 ரன்களை சேர்த்து இருந்தபோது ஆட்டமிழந்தார். வெறும் 31 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களை விளாசி அசத்தினார். அவரைதொடர்ந்து 75 ரன்கள் சேர்த்து இருந்தபோது இஷன் கிஷனும் ஆட்டமிழந்தார். 41 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களை விளாசினார்.
திலக் வர்மா அதிரடி;
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். அவறுக்கு துணையாக டிம் டேவிட்டும் அதிரடி காட்டினார். இந்த கூட்டன்ணி இறுதிகட்டத்தில் அதிரடியாக விளையாடி 38 ரன்களை குவித்தது.
மும்பை வெற்றி:
இறுதியில் 18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது மும்பை அணி. இதன் மூலம் நடப்பு தொடரில் ஏற்கனவே பெற்ற தோல்விக்கு, பஞ்சாப் அணியை பழிதீர்த்தது மும்பை அணி. கடந்த முறை மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், இந்த போட்டியில் தான் வீசிய 4 ஓவர்களில் 66 ரன்களை வாரிக்கொடுத்தார்.
முதல் இன்னிங்ஸ் விவரம்:
தவான் அதிரடி:
மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் ப்ரப்சிம்ரன் சிங் வெறும் 9 ரன்களில் நடையை கட்டினர். மருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தவான் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த ஷார்ட் 27 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
லிவிங்ஸ்டோன் - ஜிதேஷ் அதிரடி:
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், லிவிங்ஸ்டோன் - ஜிதேஷ் சர்மா கூட்டணி அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. மும்பையின் பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விளாசித் தள்ளியது. இந்த கூட்டணி வெறும் 24 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. இதனால், 32 பந்துகளில் லிவிங்ஸ்டோன் அரைசதம் கடந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர், 42 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். மறுமுனையில் ஜிதேஷ் சர்மாவும் அதிரடியாக விளையாடி27 பந்துகளில் 49 ரன்களை சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை அணிக்கு இலக்கு:
இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை சேர்த்தது. அந்த இலக்கை மும்பை அணி எளிதில் அடைந்து வெற்றி பெற்றது.