IPL 2023 MI vs SRH Playing XI: மும்பை அணிக்கு எதிரான பலமான ஹைதராபாத் அணி இது தானாம்.. ப்ளேயிங் லெவன் இதோ..!
IPL 2023 MI vs SRH Playing XI: ஹாட்ரிக் வெற்றிக்காக போராடும் மும்பை மற்றும் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவன் குறித்து இங்கு காணலாம்.
IPL 2023 MI vs SRH Match: ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுவதால் மும்பை அணிக்கு சற்று சவாலாக இருக்கும். இந்த போட்டியில் டாஸ் வென்ற அணியின் கேப்டன் முடிவு செய்துள்ளார்.
நடப்பு தொடரில் இதுவரை மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய இரு அணிகளின் செயல்பாடும் ஒரே விதமாக தான் உள்ளன. முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்த அணிகள், அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் முறையே, 8 மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளன. இன்றைய போட்டியின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில், 5வது இடத்திற்கு முன்னேற இரு அணிகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இரு அணிகளும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்திற்குப் பின்னர், திறமையான இளம் வீரர்களை தங்களது அணியில் அதிகம் எடுத்துள்ளதால், இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தன. இரு அணிகளும் அதன் பின்னர் போட்டியிட்ட இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றன. குறிப்பாக கடந்த போட்டியில் மும்பை அணி அர்ஜுன் தெண்டுல்கர் (சச்சின் தெண்டுகரின் மகன்) அறிமுகமானார். இடது கை பந்து வீச்சாளரான இவர்
மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளேயிங் லெவன்
ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், அர்ஜுன் டெண்டுல்கர், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
மும்பை அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
ரிலே மெரிடித், ராமன்தீப் சிங், குமார் கார்த்திகேயா, ஷம்ஸ் முலானி, விஷ்ணு வினோத்,
சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவன்
மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்
ஹைதராபாத் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
அப்துல் சமத், விவ்ராந்த் சர்மா, க்ளென் பிலிப்ஸ், மயங்க் டாகர், உம்ரான் மாலிக்,