(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2023 MI vs KKR Playing XI: கேப்டனாக சூர்யகுமார்; இம்பேக்ட் ப்ளேயரில் ரோகித் ஷர்மா; கொல்கத்தாவை வீழ்த்த மும்பையின் வியூகம்: ப்ளேயிங் லெவன் இதோ..!
IPL 2023 MI vs KKR Playing XI: கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார்.
ஐ.பி.எல். தொடரில் இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சூர்யகுமார்ன் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச முடிவு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மிகவும் பலமான அணிகளான கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதிக் கொள்கின்றன. இரு அணிகளும் ஐபிஎல் தொடரின் தொடக்க சீசனான 2008ம் ஆண்டு முதலே மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை 31 முறை இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 22 போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி வெறும் 9 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஹாட்ரிக் தோல்வி:
மொத்த ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை அணி ஆதிக்கம் செலுத்தினாலும், கடைசி 5 போட்டிகளில் கொல்கத்தா அணி தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. குறிப்பாக கடைசியாக இவ்விரு அணிகளும் விளையாடிய 3 போட்டிகளிலும் கொல்கத்தா அணி தான் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சீசனில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. அந்த ஒரு வெற்றியும் இந்த தொடரில் இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறாத டெல்லி அணியை வீழ்த்தியுள்ளது. ஆனால், கொல்கத்தாவைப் பொறுத்தவரையில் இந்த சீசனில் மிகவும் பலமான அணியாக காணப்படுகிறது. இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் இங்கு காணலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்
ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், என் ஜெகதீசன், நிதிஷ் ராணா(கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
சுயாஷ் சர்மா, டேவிட் வைஸ், அனுகுல் ராய், மந்தீப் சிங், வைபவ் அரோரா
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்
இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), டிம் டேவிட், நேஹால் வதேரா, அர்ஜுன் டெண்டுல்கர், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், ரிலே மெரிடித்
மும்பை இந்தியன்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
ரோஹித் சர்மா, ரமன்தீப் சிங், அர்ஷத் கான், விஷ்ணு வினோத், குமார் கார்த்திகேயா