LSG vs PBKS, Match Highlights: பேட்டிங்கில் அதகளம்.. பந்துவீச்சில் மிரட்டல்.. பஞ்சாபை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தவான் ஏமாற்றம்:
லக்னோ அணி நிர்ணயித்த 258 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் தவான் வெறும் ஒரு ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து இம்பேக்ட் பிளேயரான ப்ரப்சிம்ரன் சிங் 9 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 31 ரன்களை சேர்ப்பதற்குள் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதர்வா - ராஜா கூட்டணி:
மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அதர்வா மற்றும் சிகந்தர் ராஜா கூட்டணி, பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இந்த கூட்டணி சீரான இடைவெளியில் சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசியது. இதனால் 30 பந்துகளில் 50 ரன்களை சேர்த்து அசத்தியது.
அரைசதம் விளாசிய அதர்வா:
ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதர்வா 26 பந்துகளிலேயே அரைசதம் கடந்து, ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சிகந்தர் ராஜா, 36 ரன்கள் எடுத்து இருந்தபோது யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, சிரப்பாக விளையாடி வந்த அதர்வாவும் 66 ரன்களை சேர்த்து இருந்தபோது, பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும்.
அடுத்தடுத்து விக்கெட்:
அவரை தொடர்ந்து லிவிங்ஸ்டோனும் 23 ரன்களை சேர்த்து இருந்தபோது விக்கெட்டை பறிகொடுத்தார். சாம் கரண் 21 ரன்களை சேர்த்து இருந்தபோது கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆட முயன்ற ஜிதேஷ் சர்மா, 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராகுல் சாஹல் வந்த வேகத்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
பஞ்சாப் அணி தோல்வி:
இதுபோன்று சீரான இடைவெளியில் பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், பஞ்சாப் அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. இதனால் லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸ் விவரம்:
ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. மொஹாலியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. காயம் காரணமாக கடந்த 3 போட்டிகளில் விலையாடமல் இருந்த பஞ்சாப் கேப்டன் தவான் அணிக்கு திரும்பினார்.
கைல் மேயர்ஸ் அதிரடி:
ப்ரார் வீசிய போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே லக்னோ கேப்டன் கே.எல். ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் நழுவவிட்டது. இதையடுத்து போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே கைல் மேயர்ஸ் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசினார். கிடைத்த மறுவாய்ப்பை முறையாக பயன்படுத்ததாக கே.எல். ராகுல் வெறும் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய கைல் மேயர்ஸ் பஞ்சாபின் பந்துவீச்சை பஞ்சு பஞ்சாக பறக்காவிட்டர். இதன் மூலம் வெறும் 20 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். தொடர்ந்து 24 பந்துகளில் 54 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.
பதோனி - ஸ்டோய்னிஷ் கூட்டணி:
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும், ம்ூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பதோனி - ஸ்டோய்னிஷ் கூட்டணி ரன் ரேட் குறையாமல் ரன் வேட்டையை நடத்தினார். இதனால் 7.4 ஓவர்கள் முடிவிலேயே லக்னோ அணி 100 ரன்களை எட்டியது. இதனிடையே, பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் நோ பால்கள் மூலம் ரன்களை வாரி வழங்கினர். இதனால், பதோனி - ஸ்டோஉனிஷ் கூட்டனி 26 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 128 ரன்களை குவித்தது. இந்த கூட்டணி 89 ரன்களை சேர்த்த நிலையில், 43 ரன்கள் எடுத்து இருந்த பதோனி லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஸ்டோய்னிஷ் அரைசதம்:
மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஷ் 31 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் நிக்கோலஸ் பூரானும் தனது பங்கிற்கு பஞ்சாப் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். இதனால் 16 ஓவர்கள் முடிவிலேயே லக்னோ அணி 200 ரன்களை எட்டியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஸ்டோய்னிஷ் 72 ரன்களை சேர்த்து இருந்தபோது ஆட்டமிழந்தார்.
பூரான் அதிரடி:
ஆனாலும் விடாமல் அதிரடி காட்டிய பூரானின் அட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்களை சேர்த்தது.