மேலும் அறிய

Johnson Charles KKR: இனி கொல்கத்தா அணியில் இவர் இல்லை.. மாற்று வீரரை அறிவித்த அணி நிர்வாகம்..! யார் தெரியுமா?

மீதமுள்ள ஐபிஎல் 2023 சீசனுக்கான வங்காளதேச விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஜான்சன் சார்லஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2023 சீசனின் 47வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்க இருக்கிறது. 

இந்தநிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புதிய அறிவிப்பை ஒன்றை அறிவித்துள்ளது. அதில், மீதமுள்ள ஐபிஎல் 2023 சீசனுக்கான வங்காளதேச விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஜான்சன் சார்லஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். குடும்ப அவசரநிலை காரணமாக லிட்டன் தாஸ் கடந்த வாரம் வங்கதேசம் திரும்ப வேண்டியிருந்தது என தெரிவித்தது. 

தொடர்ந்து ஐபிஎல் நிர்வாகமும் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. அதில், ”டாடா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் எஞ்சிய போட்டிகளுக்கு லிட்டன் தாஸுக்குப் பதிலாக ஜான்சன் சார்லஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இணைந்துள்ளதாக அந்த அணி நிர்வாகம் இன்று அறிவித்தது” என குறிப்பிட்டு இருந்தது. 

யார் இந்த ஜான்சன் சார்லஸ்..? 

சார்லஸ் ஜான்சன் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இவர் இதுவரை 41 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 971 ரன்கள் எடுத்துள்ளார். 2016 மற்றும் 2012 ஐசிசி உலக டி20 வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் சார்லஸ் இடம்பெற்றுள்ளார். இந்தநிலையில், 50 லட்சம் கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்த்துள்ளது.

அதேபோல்,சார்லஸ் ஜான்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 48 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1283 ரன்களை எடுத்துள்ளார். இவர் ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் அடித்துள்ளார். சார்லஸ் இதுவரை மொத்தம் 224 டி20 போட்டிகளில் விளையாடி 5607 ரன்கள் எடுத்துள்ளார். (இதில், 3 சதங்கள் மற்றும் 32 அரைசதங்கள் அடங்கும். அவரது சிறந்த ஸ்கோர் 118 ரன்கள்.) விக்கெட் கீப்பிங்கிலும் சார்லஸ் சிறந்த சாதனை படைத்துள்ளார். டி20 வடிவத்தில் 5 ஸ்டம்ப் அவுட்களும், 82 கேட்சுகளை எடுத்துள்ளார். 

கொல்கத்தா அணி இந்த சீசனில் எப்படி? 

ஐபிஎல் 2023 சீசனில் கொல்கத்தாவின் செயல்திறன் சிறப்பாக இல்லை, இந்த சீசனில் கொல்கத்தா அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார்.

கொல்கத்தா முழு அணி விவரம்:

நிதிஷ் ராணா (கேப்டன்), வைபவ் அரோரா, லாக்கி பெர்குசன், ஹர்ஷித் ராணா, வெங்கடேஷ் ஐயர், என் ஜெகதீசன், குல்வந்த் கெஜ்ரோலியா, சார்லஸ் ஜான்சன், மந்தீப் சிங், சுனில் நரைன், ரஹ்மானுல்லா குர்பாஸ், அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷரிங்கு, சுயா சிங், ஷரிங்கு , ஷர்துல் தாக்கூர், வருண் சக்ரவர்த்தி, டேவிட் வைஸ், உமேஷ் யாதவ், ஜேசன் ராய்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget