IPL 2023 DC vs MI Playing XI: முதல் வெற்றியை பெற மோதும் இரு அணிகள்.. யார் உள்ளே? யார் வெளியே? கேப்டன்கள் போட்ட கணக்கு இது தான்..!
DC vs MI, IPL 2023: முதல் வெற்றியை பெற டெல்லி மற்றும் மும்பை அணியில் உள்ள ப்ளேயிங் லெவன் மற்றும் இம்பேக்ட் ப்ளேயர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கோலகலமாக தொடங்கி ஒவ்வொரு அணியும் புள்ளிப் பட்டியலில் தங்களை எப்படி உயர்த்துவது என்ற முனைப்பில் விளையாடி வருகின்றன. ஆனால் இன்னும் வெற்றிக்கு திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கும் அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் தான். இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
இந்த இரு அணிகளில் டெல்லி அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதே நேரத்தில் மும்பை அணியும் தான் விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இரு அணிகளும் இன்னும் ஒரு அணியாக இணைந்து இந்த தொடரில் வெற்றியை பெறவில்லை. இந்த போட்டியில் எப்படியேனும் ஒரு அணி வெற்றிக் கணக்கை துவங்கும் என்பதால் இரு அணியின் ரசிகர்களும் பெரும் நம்பிக்கையில் உள்ளனர்.
ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் மும்பை அணி 17 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் இடையிலான கடைசி 5 போட்டிகளில், டெல்லி அணி மூன்று முறையும், மும்பை அணி இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு மும்பை மற்றும் டெல்லி அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடி, அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் பிளேயிங் லெவன்
பிருத்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), மணீஷ் பாண்டே, யாஷ் துல், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
அமன் கான், முகேஷ் குமார், சர்பராஸ் கான், பிரவீன் துபே, இஷாந்த் சர்மா
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்
ரோஹித் ஷர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹால் வதேரா, ரித்திக் ஷோக்கீன், ரிலே மெரிடித், அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
மும்பை இந்தியன்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்
டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், குமார் கார்த்திகேயா, அர்ஜுன் டெண்டுல்கர், ராமன்தீப் சிங்