Watch Video: ’வேட்டையாடவே வெறியோடு சுத்துறான்..’ எல்லைகளில் தெறிக்கும் பந்துகள்.. இது தோனி பாயும் நேரம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி இதுவரை ஐபிஎல் தொடரில் 234 போட்டிகளில் விளையாடி 4,978 ரன்கள் அடித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் 2023 தொடரானது தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும், வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கலாம். இதற்காக தன்னை திறம்பட செயல்பட வைக்க தோனி, வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2020 ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற 41 வயதான தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். எம்.எஸ். தோனி பெரும்பாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை. இதனால் தோனி குறித்து எந்த வீடியோவோ அல்லது புகைப்படமோ வெளியானால் மிகப்பெரிய வைரலாகும்.
Thala Update!
— Chennai Super Kings (@ChennaiIPL) March 9, 2023
⏳: 1️⃣9️⃣ : 2️⃣9️⃣#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/lr5a1c3E6i
இந்தநிலையில், மகேந்திர சிங் தோனி பிரமாண்ட சிக்ஸர்களை அடிக்கும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், 'தல அப்டேட் 19:29' என தலைப்பில் எழுதியிருந்தனர். இதில் தோனி பயிற்சியின் போது சக்திவாய்ந்த ஷாட்களை அடித்து வருகிறார். தொடர்ந்து பந்தை பவுண்டரி, சிக்ஸருக்கு அனுப்பி வருகிறார்.
Chennai boys on song! 💥#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/Z3SFMQRk4v
— Chennai Super Kings (@ChennaiIPL) March 6, 2023
அடுத்த கேப்டன் யார்..?
சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு தோனி போகும்போதும் சிறந்த தலைமையை சிஎஸ்கே அணிக்கு கொடுத்துவிட்டு செல்வார் என்ற அடிப்படையில் ரவீந்திட ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், ஒரு சில போட்டிகளுக்கு பிறகு மீண்டும் தோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
கடந்த 2022 சீசனில் சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இதற்குப் பிறகு, இந்த ஆண்டு ஏலத்தில், அணி தனது அணியில் பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு சிறந்த ஆல்-ரவுண்டரை இணைத்துள்ளது, அவர் அடுத்த ஆண்டு அணியின் கேப்டனாகவும் செயல்பட வாய்ப்புள்ளது.
This way to the super exclusive gallery from the grind last night! 📸#WhistlePodu #Yellove 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) March 7, 2023
புதிய மைல்கல்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி இதுவரை ஐபிஎல் தொடரில் 234 போட்டிகளில் விளையாடி 4,978 ரன்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டு வெறும் 22 ரன்கள் எடுத்து 5,000 ரன்களை கடப்பார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 7வது வீரர் என்ற பெருமையை தோனி படைப்பார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ரிருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், தீபக் சாஹர், சி. , மதிஷா பத்திரனா, சிமர்ஜித் சிங், பிரசாந்த் சோலங்கி, மகிஷ் திக்ஷ்னா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷித், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா.