மேலும் அறிய

IPL 2023: 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 வெளிநாட்டு கேப்டன்கள்..! ஐ.பி.எல். கோப்பைக்காக களமிறங்கப் போகும் லீடர்கள் யார்? யார்?

கடந்த 2022ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டு பிளெசிஸை கேப்டனாக நியமித்தது. இந்த 3 அணிகளில் மட்டுமே தற்போது வெளிநாட்டு கேப்டன்கள் உள்ளனர்.

இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) தொடரின் 16வது சீசன் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் கேப்டன்களின் பெயர்களை வெளியிட்டன. 8 அணிகளின் கேப்டன்களை ஏற்கனவே தெரிந்தநிலையில், நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் தங்களது கேப்டன்களை அறிவித்தனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

3 வெளிநாட்டு கேப்டன்கள்:

கடந்த டிசம்பர் மாதம் விபத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனமாக நியமிக்கப்பட்டார். அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரமை நியமித்தது.

கடந்த 2022ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டு பிளெசிஸை கேப்டனாக நியமித்தது. இந்த 3 அணிகளில் மட்டுமே தற்போது வெளிநாட்டு கேப்டன்கள் உள்ளனர். மீதமுள்ள 7 அணிகளிலும் இந்திய கேப்டன்கள் மட்டுமே உள்ளனர். 6 ஆண்டுகளுக்குப் பிறகு 3 வெளிநாட்டு கேப்டன்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

வெளிநாட்டு கேப்டன்களின் தலைமையில் கோப்பை : 

கடந்த 2008ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷேன் வார்னே தலைமையின் கீழ் கோப்பை வென்றது. ஆடம் கில்கிறிஸ்ட் 2009 இல் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் 2016 இல் டேவிட் வார்னர் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் கோப்பைகளை வென்றுள்ளன. இந்த 3 வெளிநாட்டு கேப்டன்கள் தவிர 12 முறை இந்திய கேப்டன்கள் தலைமையில் கோப்பைகள் எடுக்கப்பட்டது. 

ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 5 முறையும், தோனி தலைமையில் சென்னை அணி 4 முறையும் வென்றுள்ளனர். அதேபோல், கௌதம் காம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி இரு முறையும், கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் அணி கோப்பையை வென்றது. 

அணிகளும் - கேப்டன்களும்:

  •  சென்னை சூப்பர் கிங்ஸ் - கேப்டன் மகேந்திர சிங் தோனி
  • டெல்லி கேப்பிடல்ஸ் - டேவிட் வார்னர்
  • குஜராத் டைட்டன்ஸ்-ஹர்திக் பாண்டியா
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஷ்ரேயாஸ் ஐயர்
  • லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் - கே.எல்.ராகுல்
  • மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா
  • பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவான்
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன்
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டு பிளெசிஸ்
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - எய்டன் மார்க்ரம்

ஐபிஎல் முழு அட்டவணை

இந்த ஐபிஎல் போட்டியில் முதல் போட்டி குஜரத்தில் உள்ள அஹமதபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் அணியும் சிஎஸ்கே அணியும் மோதிக்கொள்கின்றன. மொத்தம் 52 நாட்கள் நடைபெறும் லீக் போட்டிகள் மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் பின்னர் கால் இறுதிப் போட்டி அதைத் தொடர்ந்து அரை இறுதிப் போட்டி அதன் பின்னர் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

அதேபோல், லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் பெங்களூரூ அணியும் குஜராத் அணியும் மோதிக் கொள்ளவுள்ளன. இந்த போட்டியும் குஜராத் மாநிலத்தின் அஹமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுளது. இந்த சீசனின் முதல் மற்றும் இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல். இரண்டாவது போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி மொஹாலியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் இந்த சீசனின் முதல் போட்டிகளாகும். 

இதைத் தொடர்ந்து இந்த சீசனின் மூன்றாவது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் டெல்லி அணியும் இந்த சீசனில் இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் மோதவுள்ளன. இந்த போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

2023ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசனின் நான்காவது போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. 

அதேபோல், அதிக முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற அணியும் இன்னும் ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாத அணியுமான அதாவது மும்பை அணியும், பெங்களூரு அணியும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி மோதிக் கொள்கின்றன. இந்த சீசனில் போட்டிகள் மொத்தம் 12 மைதானங்களில் நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
Embed widget