RRvs KKR: சாஹல் ஹாட்ரிக்.. ஸ்ரேயாஸ்,உமேஷ் அதிரடி வீண்... 7 ரன்களில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் !
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர் மற்றும் படிக்கல் சிறப்பான துவகத்தை தந்தனர். பட்லரின் அதிரடி சதத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேன் மற்றும் ஆரோன் ஃபின்ச் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே பந்து எதையும் சந்திக்காமல் சுனில் நரேன் ரன் அவுட்டாகினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். அவரும் ஃபின்சும் மாறி மாறி பவுண்டரிகளை அடித்தனர்.
சிறப்பாக விளையாடிய ஆரோன் ஃபின்ச் அரைசதம் கடந்து 28 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 9 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 107 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்திருந்தது. சிறப்பாக ஆடிய கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 12 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.
அதிரடி காட்டி வந்த நிதிஷ் ரானா 18 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிரடி வீரர் ரஸல் ஒரே பந்தில் அஷ்வின் இடம் விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் 14 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 152 ரன்கள் எடுத்தது. கடைசி 6 ஓவர்களில் கொல்கத்தா அணி வெற்றி பெற 66 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு புறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி காட்டி வந்தார். 16 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்கள் எடுத்திருந்த போது சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 51 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிவம் மாவி மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்காரணமாக யுஸ்வேந்திர சாஹல் ஹாட்ரிக் எடுத்தார். அத்துடன் ஐபிஎல் போட்டிகளில் முதல் முறையாக ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
OBED MCCOY, LADIES AND GENTLEMEN! 🔥💗🔊 pic.twitter.com/qC831q90e1
— Rajasthan Royals (@rajasthanroyals) April 18, 2022
இறுதியில் அதிரடி காட்டிய உமேஷ் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மெக்காய் வீசினார். அதில் இரண்டாவது பந்தில் ஷெல்டன் ஜாக்சன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் உமேஷ் யாதவ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்