Pant Penalised: ரிஷப்புக்கு 100% அபராதம்... பயிற்சியாளருக்கு தடை...No ball சர்ச்சையில் ஐபிஎல் அதிரடி
“எங்கள் அணியில் இருந்து ஒருவரை உள்ளே அனுப்பியது தவறுதான். ஆனால், அதேபோல எங்களுக்கு நடந்ததும் தவறுதான்” - பண்ட்
ஐபிஎல் விதிமுறைகளை மீறியதற்காக டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் பண்ட், ஷர்துல் தாகூர், அணி பயிற்சியாளர் பிரவீன் அம்ப்ரே ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 222 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
அப்போது, கள நடுவரின் முடிவுக்கு எதிராக குரல் எழுப்பிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் பண்ட், பேட்டிங் செய்து கொண்டிருக்கும் அணி வீரர்கள் திரும்ப வரச்சொல்லி சைகை செய்தார். அதனை அடுத்து, ஃபீல்டிங் பயிற்சியாளர் பிரவீன் அம்ரேவை களத்திற்கு அனுப்பி கள நடுவர்களுடன் பேச சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ரிஷப் பண்ட்டிற்கு நேற்றைய போட்டியில் விளையாடியதற்காக அளிக்கப்படும் தொகையில் இருந்து 100% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாகூருக்கு 50% அபராதமும், போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது மைதானத்திற்குள் நுழைந்த டெல்லி அணி ஃபீல்டிங் பயிற்சியாளர் பிரவீன் அம்ப்ரேவுக்கு 100% அபராதமும் அடுத்த ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
#JUSTIN | நோபால் சர்ச்சை: ரிஷப் பந்துக்கு 100% அபராதம் https://t.co/wupaoCQKa2 | #DCvsRR #RishabhPant #IPL2022 pic.twitter.com/ONGvXQpSek
— ABP Nadu (@abpnadu) April 23, 2022
போட்டி முடிந்தபின், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பண்ட், “எங்கள் அணியில் இருந்து ஒருவரை உள்ளே அனுப்பியது தவறுதான். ஆனால், அதே போல எங்களுக்கு நடந்ததும் தவறுதான்” என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, 2019-ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. சென்னை அணி பேட்டிங் செய்தபோது, கடைசி ஓவரின் நான்காவது பந்து நோபால் வீசப்பட்டது. ஆனால், கள நடுவர்கள் நோ பால் அளிக்காததால் கேப்டன் தோனி களத்திற்கு சென்று நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
பிற முக்கியச் செய்திகள்:
IPL 2022: இன்று டபுள் டக்கர் போட்டிகள்... புள்ளிப்பட்டியலில் எந்த இடம்? வெல்லப்போவது எந்த அணி?https://t.co/YC79YXvjxx#IPL2022
— ABP Nadu (@abpnadu) April 23, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்