RCB vs GT: கோலி-பட்டிதார் அசத்தல்.. கடைசி கட்டத்தில் ஆர்சிபியை கட்டுப்படுத்திய குஜராத்- 171 ரன்கள் இலக்கு !
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோலி மற்றும் பட்டிதார் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேப்டன் டூபிளசிஸ் ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் குஜராத் அணியின் வீரர் பிரதீப் சங்வான் வீசிய பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் கேப்டன் டூபிளசிஸ் டக் அவுட்டாகினார். அதன்பின்னர் விராட் கோலியுடன் ராஜாட் பட்டிதார் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக விராட் கோலி பவுண்டரிகளை மழையை பொழிந்தார். அவர் 45 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் 14 ஐபிஎல் போட்டிகளுக்கு விராட் கோலி தன்னுடைய முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
5⃣0⃣ for @imVkohli! 👏👏
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
43rd #TATAIPL fifty for the #RCB opener! 👍
Follow the match ▶️ https://t.co/FVnv8ovvEQ #GTvRCB pic.twitter.com/OnYAutfN8H
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ராஜாட் பட்டிதார் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்காரணமாக 14 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. ராஜாட் பட்டிதார் 32 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசி 52 ரன்களில் ஆட்டமிழந்தார். 16 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது.
கடைசி 4 ஓவர்களில் மேக்ஸ்வேல் மற்றும் விராட் கோலி அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி 58 ரன்களுக்கு ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். எனினும் மேக்ஸ்வேல் ஒருபுறம் தன்னுடைய அதிரடியை தொடர்ந்தார். அவர் 18 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் அடித்து 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்