IPL 2022: மீண்டும் இணையும் டிவில்லியர்ஸ்... டூபிளசிஸ் ஆர்சிபி அணியின் புதிய ப்ளான் இதுதான்..
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் தொடர்பான அறிவிப்பு வரும் 12ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இம்முறை ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று உள்ளதால் ஐபிஎல் தொடர் தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வரும் ஐபிஎல் தொடருக்கு அணியின் கேப்டன் மற்றும் ஆலோசகர் தொடர்பான அறிவிப்பை வரும் 12ஆம் தேதி அறிவிக்க உள்ளது. இது தொடர்பாக இன்று ஆர்சிபி அணியின் அதிகார்ப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ஒரு அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பு தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வரும் 12ஆம் தேதி ஆர்சிபி அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் டூபிளசிஸ் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர்கள் பட்டியலில் அல்லது மெண்டராக டிவில்லியர்ஸ் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
The beginning of a new era of leadership requires a BIG stage. 😎
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 8, 2022
Who is the captain of RCB for #IPL2022? Come find out on 12th March at the #RCBUnbox event on Museum Cross Road, Church Street. 🤩💪🏻#PlayBold #UnboxTheBold #ForOur12thMan pic.twitter.com/HdbA98AdXB
2011ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ் விளையாடி வருகிறார். அவர் கடந்த ஐபிஎல் தொடருடன் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். ஆகவே அவரை மீண்டும் அணியின் ஆலோசகராக கொண்டு வர அணி நிர்வாகம் மற்றும் விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆகவே இது தொடர்பான அறிவிப்பு வரும் 12ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய ஜெர்ஸியும் அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி கடந்த ஐபிஎல் தொடரின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஆர்சிபி அணி ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வேலை தக்கவைத்தது. ஆகவே அவர் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதால் அவர் ஐபிஎல் முதல் பாதியில் பங்கேற்பது சற்று சந்தேகமாக உள்ளது. எனவே ஏலத்தில் எடுக்கப்பட்ட டூபிளசிஸை அந்த அணியின் கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




















