RR vs MI: மீண்டும் அதிரடி காட்டிய பட்லர்... ராஜஸ்தான் அணி 158 ரன்கள் குவிப்பு-முதல் வெற்றியை மும்பை பெறுமா?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 158 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் 15 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சான் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின்னர் வந்த மிட்சல் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 10 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் மிட்சல் 20 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் பட்லர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 48 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் நடப்புத் தொடரில் 500 ரன்களுக்கு மேல் கடந்து அசத்தினார். அவர் 52 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் உதவியுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் 16 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.
Mumbai Indians fans - what do you all reckon? Who is going to be crucial to the #MI run-chase?
— IndianPremierLeague (@IPL) April 30, 2022
Let us know in the comments below ✍️#RRvMI | #TATAIPL | #IPL2022
Follow the game here: https://t.co/7GdkGvvdcz pic.twitter.com/4xwNNQPqPS
அதன்பின்னர் வந்த ரியான் பராக் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரவிச்சந்திரன் அஷ்வின் 9 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 158 ரன்கள் எடுத்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
ன் பராக் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரவிச்சந்திரன் அஷ்வின் 9 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.