MI vs GT: ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா குஜராத்?.. இரண்டாவது வெற்றியை பெறுமா மும்பை?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்புத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. ஆகவே இனி வரும் போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக நிறைவு செய்யும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி தற்போது வரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 8 வெற்றி மற்றும் 2 தோல்விகளை சந்தித்துள்ளது. தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் க்ரூணல், ஷமி ஆகியோரின் பந்துவீச்சு அணிக்கு கூடுதல் பலம் சேர்த்து வருகிறது.
निघाली आमची सवारी Brabourne ला! 🚍
— Mumbai Indians (@mipaltan) May 6, 2022
Paltan, wish the boys good luck for #GTvMI 👇💙#OneFamily #DilKholKe #MumbaiIndians MI TV pic.twitter.com/LY9f2upspR
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் அந்த அணியின் சூர்யகுமார் யாதவ் அசத்தினார். எனினும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் ஃபார்ம் மிகவும் மோசமாக உள்ளது அந்த அணியின் பின்னடைவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. திலக் வர்மா மட்டும் அந்த அணிக்கு நல்ல எதிர்கால வீரராக உருவெடுத்துள்ளார். மற்றப்படி இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு மிகவும் மோசமான தொடராகவே அமைந்துள்ளது. கடைசி 4 போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா ஃபார்மிற்கு திரும்பவாரா என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கிட்டதட்ட உறுதியாகிவிடும். ஆகவே அந்த அணியும் இன்று வெற்றி பெற்று தன்னுடைய ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய தீவிரமாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் கூடுதல் சுறுசுறுப்பாக இருக்கும். முதல் முறையாக களமிறங்கியுள்ள குஜராத் அணி முதல் தொடரிலேயே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்