IPL 2022: தவறான கருத்தை பரப்பாதீங்க.. தோனி விளம்பரம் நீக்கம்.. இதுதான் காரணம்!
இப்படி பரபரவென சென்றுகொண்டிருக்கும் ஐபிஎல்க்கு சில மாதங்களுக்கு முன்பதாகவே விளம்பரத்தை தொடங்கிவிட்டது ஐபிஎல்.

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 26ம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதுப்புது அணிகள் களமிறங்கி ஐபிஎல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது. மறுபக்கம் தொடக்கம் முதலே சென்னையும், மும்பையும் தொடர் தோல்விகளை சந்தித்து ஷாக் கொடுத்து வருகிறது. இப்படி பரபரவென சென்றுகொண்டிருக்கும் ஐபிஎல்க்கு சில மாதங்களுக்கு முன்பதாகவே விளம்பரத்தை தொடங்கிவிட்டது ஐபிஎல்.
குறிப்பாக தோனியின் விளம்பரம் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பேருந்தில் செம கெட்டப்புடன் சென்றுகொண்டிருக்கும் தோனி திடீரென பேருந்தை நிறுத்துவார். திடீரென பேருந்து நிற்பதால் பலரும் ஒலி எழுப்பி நகரச் சொல்வார்கள். ஆனால் பேருந்தை மீண்டும் பின்னால் நகர்த்தி அனைவருக்கும் கஷ்டத்தை கொடுப்பார் தோனி. ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்பதற்கு சூப்பர் ஓவர் நடைபெறுகிறது என ஆர்வமாக ஐபிஎல்லை பார்ப்பார்.
When it's the #TATAIPL, fans can go to any extent to catch the action - kyunki #YehAbNormalHai!
— IndianPremierLeague (@IPL) March 4, 2022
What are you expecting from the new season?@StarSportsIndia | @disneyplus pic.twitter.com/WPMZrbQ9sd
இந்த விளம்பரம் ஐபிஎல் மீதான ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்திருந்தது. ஆனால் தற்போது இந்த விளம்பரத்தை திரும்பப் பெற்றுள்ளது ஐபிஎல். என்னதான் விளம்பரமாக இருந்தாலும் சாலை விதிகளை மீறுவது குற்றம் என்றும், அதனை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அந்த விளம்பரத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளையும் பதிவு செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே க்ளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




















