IPL 2022: லக்னோ அணிக்கு ஆரம்பமே சரியில்லையே... காயம் காரணமாக முன்னணி வீரர் விலகல்..
மார்க் வுட்டுக்கு பதிலாக வேறு எந்த வீரர் தேர்வு செய்யப்படுவார் என்பது பற்றி லக்னோ அணி இன்னும் விவரம் வெளியிடவில்லை.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 26-ஆம் தேதி சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும்.
இந்நிலையில், கே.எல்.ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 7.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக மார்க் வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். மார்க் வுட்டுக்கு பதிலாக வேறு எந்த வீரர் தேர்வு செய்யப்படுவார் என்பது பற்றி லக்னோ அணி இன்னும் விவரம் வெளியிடவில்லை. மார்க் வுட் விலகி இருப்பது லக்னோ அணிக்கு பெரிதும் பின்னடைவாக இருக்கும் என தெரிகிறது.
லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் போட்டி அட்டவணை:
தேதி | போட்டி | நேரம் | இடம் |
28.03.2022 | GT vs LSG | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
31.03.2022 | LSG vs CSK | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
04.04.2022 | SRH vs LSG | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
07.04.2022 | LSG vs DC | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
10.04.2022 | RR vs LSG | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
16.04.2022 | MI vs LSG | மதியம் 3.30 | மும்பை சிசிஐ மைதானம் |
19.04.2022 | LSG vs RCB | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
24.04.2022 | LSG vs MI | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
29.04.2022 | PBKS vs LSG | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
01.05.2022 | DC vs LSG | மதியம் 3.30 | மும்பை வான்கடே மைதானம் |
07.05.2022 | LSG vs KKR | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
10.05.2022 | LSG vs GT | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
15.05.2022 | LSG vs RR | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
18.05.2022 | KKR vs LSG | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் மைதானம் |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்