LSG vs KKR: அவேஷ் கான், ஹோல்டர் வேகத்தில் சுருண்ட கேகேஆர்.. லக்னோ அபார வெற்றி !
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியில் டிகாக் 50 மற்றும் தீபக் ஹூடா 41 ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 176 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் முதல் ஓவரிலேயே பாபா இந்தர்ஜீத் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஃபின்ச் 14 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வந்த நிதிஷ் ரானாவும் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதன்காரணமாக கொல்கத்தா அணி 7 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்தது.
🔥🏏 INTENSE SPELL! Avesh gave KKR no space to breathe tonight. He ends the night with the wickets of Nitish Rana, Andre Russell, and Anukul Roy!
— The Bharat Army (@thebharatarmy) May 7, 2022
👏 This spell also includes a wicket-maiden!
📸 IPL • #AveshKhan #KKRvLSG #LSGvKKR #IPL #IPL2022 #TATAIPL #BharatArmy pic.twitter.com/QzwCizBepK
4 விக்கெட் இழந்த பிறகு களமிறங்கிய ரஸல் தன்னுடைய அதிரடி பாணியில் கலக்க தொடங்கினார். குறிப்பாக ஜேசன் ஹோல்டர் வீசிய ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் விளாசி அசத்தினார். மறுமுனையில் இருந்த ரிங்கூ சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஸல் 19 பந்துகளில் 5 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசி 45 ரன்கள் எடுத்தார். அவர் அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அன்குல் ராய் ரன் எதுவும் எடுக்காமல் அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன்காரணமாக கொல்கத்தா அணி 13 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 14.3 ஓவர்களில் கொல்கத்தா அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் லக்னோ அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் பிராகசப்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்