CSK VS GT : சென்னை அணிக்கு தொடரும் சோகம்..புள்ளி பட்டியலில் அதே வேகம்..7 விக்கெட் வித்தியாசத்தில் GT வெற்றி
குஜராத் அணியில் சஹா 67 ரன்களுடனும், மில்லர் 15 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் ஐபிஎல் 62 வது போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன் அடிப்படையில், சென்னை அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 5 ரன்களில் வெளியேற, ருதுராஜ் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
தொடர்ந்து, சென்னை அணியின் விக்கெட்கள் மளமளவென விழுக, மறுபுறம் தாக்குபிடித்த ருதுராஜ் அரைசதம் அடித்து 53 ரன்களில் ரசித் கான் வீசிய 16 வது ஓவரில் அவுட் ஆனார். அதனைதொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே ரன் எண்ணிகையை தொடராமல் வெளியேறினார்.
பின்வரிசையில் களம் கண்ட தோனியும் 7 ரன்களில்
ICYMI: @Ruutu1331 shines with a fine FIFTY 👍 👍
— IndianPremierLeague (@IPL) May 15, 2022
The @ChennaiIPL right-hander put on yet another superb display and scored his third half-century of the season. 👌 👌 #TATAIPL | #CSKvGT
Watch his knock 🎥 🔽https://t.co/e2QOEbODCI pic.twitter.com/WGS4Isw9JP
வெளியேறி அதிர்ச்சி அளிக்க, தமிழக வீரர் ஜெகதீசன் கடைசி வரை அவுட் ஆகாமல் 39 ரன்கள் எடுத்து இருந்தார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. குஜராத் அணியின் தொடக்க வீரராக சஹா சென்னை அணியின் பந்து வீச்சை நொறுக்கினார். கில் நிதானம் காட்ட குஜராத் அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளராக மதீஷா பதிரனா களமிறங்கி 8 வது ஓவர் வீசினார். இவர் வீசிய 8 வது முதல் பந்தே சுப்மன் கில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.
ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஹா அரைசதம் கடந்தார். தொடர்ந்து மூன்றவதாக களமிறங்கிய மேத்யூ வேட்டை, மொயீன் அலி 20 ரன்கள் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மதீஷா பதிரனா வீசிய 14 வது ஓவர் முதல் பந்தில் 7 ரன்களுக்கு அவுட் ஆனார்.
FIFTY for @Wriddhipops! 👏 👏
— IndianPremierLeague (@IPL) May 15, 2022
What a fine knock this has been by the @gujarat_titans right-hander in the chase! 👌 👌
Follow the match ▶️ https://t.co/wRjV4rFs6i #TATAIPL | #CSKvGT pic.twitter.com/qt5yEdgMWj
சஹா உடன் இணைந்த மில்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, குஜராத் அணி 19.1 ஓவரில் 134 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் சஹா 67 ரன்களுடனும், மில்லர் 15 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.
சென்னை அணி சார்பில் அறிமுக வீரர் மதீஷா பதிரனா 2 விக்கெட்களும், மொயீன் அலி 1 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்