CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்றில் முதல் முறையாக நடந்த சம்பவம்- ஜடேஜாவின் மாஸ்டர் ஸ்டோர்க் !
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக டேவான் கான்வே களமிறங்கியுள்ளார்.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை அணியில் தற்போது 3 நியூசிலாந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். டேவான் கான்வே, மிட்செல் சாண்டனர் மற்றும் ஆடெம் மில்னே என மூன்று நியூசிலாந்து வீரர்கள் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளனர். இதன்மூலம் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று வீரர்கள் சென்னை அணியில் இடம்பிடித்துள்ளனர். சென்னை அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் ஃபிளமிங் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்த டூபிளசிஸ் இம்முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பிடித்துள்ளார். ஆகவே சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் உடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தச் சூழலில் ருதுராஜ் கெய்க்வாட் உடன் நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளார்.
சென்னை அணி சற்று முன்பு வரை 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்