IPL 2022 Final: கோப்பையை வெல்லும் அணி எது? யாரு கனவு இங்கு பலிக்கும்.. RR - GT இன்று மோதல்!
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்களின் சுயலாபத்திற்கான வெற்றிதான்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும் என்பதால் இந்தப் போட்டியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தற்போது வரை விளையாடியுள்ள 16 போட்டிகளில் 824 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவருடன் சேர்ந்து சஞ்சு சாம்சன், படிக்கல், அஷ்வின் போன்றோர் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்த ஐபிஎல் தொடரில் 421 ரன்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் சாஹல் 16 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட் வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
14 long years later… 💗
— Rajasthan Royals (@rajasthanroyals) May 28, 2022
Coming for you. 🏆 pic.twitter.com/s6HgwzIEjO
ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே இந்த ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது. என்னதான் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்த அணி எண்ணிகையில் முதலிடத்தில் இருந்தாலும், இறுதி போட்டி வரை வர முக்கிய காரணம் சஞ்சு சாம்சனின் கேப்டன்ஷிப் என்பதில் எந்தவொரு மாற்று கருத்தும் இல்லை.
அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அணியில் மிகப்பெரிய பலமே ஹர்திக் பாண்டியா. இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் எந்தவொரு தொடரிலும் வீரராக கூட பங்கேற்கவில்லை. தான் யார் என்பதை நிரூபிக்கவே கேப்டன் பதவியை ஏற்று குஜராத் அணியை இறுதி போட்டி வரை கொண்டு சென்றார். இந்த அணியில் அனைத்து வீரர்களுமே ஏதாவது ஒரு போட்டியில் பெர்ஃபாமன்ஸ் செய்து அணியை இக்கட்டான நிலைமையில் வெற்றி பெற செய்தனர்.
Knock-knock, Padosi! ✊
— Gujarat Titans (@gujarat_titans) May 28, 2022
Let’s play 🏏? #SeasonOfFirsts #AavaDe #GTvRR #TATAIPL #IPLFinal pic.twitter.com/UNTuGWRw6s
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்களின் சுயலாபத்திற்கான வெற்றிதான். இருவரது வெற்றியிலும் டி20 உலகப்கோப்பை இந்திய அணியில் இடம் பிடிப்பது ஒன்றே என்று கணக்கிடப்படலாம்.
இந்த இரண்டு அணிகளில் யார் வெற்றி பெற்றாலும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் புதியதாக ஒரு கோப்பையை வெல்ல இருக்கிறது. இன்று ஆட்டம் எப்படியும் வேறமாதிரி.. வேறமாதிரியாகதான் இருக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்