CSK vs RCB: ஜெயிச்சாதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. வைரலாகும் ஆர்.சி.பி ரசிகையின் போஸ்டர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு எப்படி காத்திருக்கிறது என்பதை சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் போது, ஒரு பெண் ரசிகை ஒரு போஸ்டருடன் வந்ததில் இருந்து அறியலாம்.
சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் விளையாடி வரும் போட்டியில், பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் வரை திருமணம் செய்ய மாட்டேன் என்று பெண் ரசிகை போஸ்டரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு எப்படி காத்திருக்கிறது என்பதை சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் போது, ஒரு பெண் ரசிகை ஒரு போஸ்டருடன் வந்ததில் இருந்து அறியலாம்.
டாக்டர் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் போது, பெண் ரசிகர் மீது கேமரா ஃபோகஸ் செய்தபோது, அனைவரது பார்வையும் அவரை நோக்கி இருந்தது. காரணம், அவரது கையில் இருந்த போஸ்டரில் எழுதப்பட்டிருந்ததுதான். அதில், ஆர்சிபி ஐபிஎல் கோப்பையை வெல்லும் வரை... அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வெல்லும் வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று எழுதப்பட்டிருந்தது.
அணியைப் பார்த்தால் இந்த முறை அந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு வாய்ப்புள்ளது. பேட்டிங்கில் ஏற்கனவே விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் போன்ற பெரிய ஜாம்பவான்கள் இருந்த நிலையில், அணியின் பந்துவீச்சு வலுவாக உள்ளது. ஃபாஃப் டு பிளெசிஸின் வருகை பேட்டிங்கை மேலும் பலப்படுத்தியுள்ளது. இந்த முறை டு பிளெசிஸ் கேப்டனாக உள்ளார், கடந்த சீசனுக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணிக்காக ஜோஷ் ஹேசில்வுட் களமிறங்கியுள்ள நிலையில், சென்னை அணி ஆடும் லெவன் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆனால், இந்தப்போட்டியில் ஷிவம் துபே, ராபின் உத்தப்பா ஆகியோர் அரை சதத்தை கடந்து வாணவேடிக்கை காட்டினர். ஆர்சிபியின் பந்துவீச்சை சிக்ஸராக பறக்கவிட்டு தெறிக்கவிட்டனர்.
சென்னை அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது, பெங்களூரு அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்