MS Dhoni Record: அடடே மாஸ்! டி20 கிரிக்கெட்டில் 7000+ ரன்கள்...தோனியின் புதிய சாதனை!
இந்த சீசனில் இன்னும் இரு அணிகளும் முதல் வெற்றியைப் பதிவு செய்யாத நிலையில், இலக்கை எட்ட லக்னோ அணியும், கட்டுப்படுத்தும் முனைப்பில் சென்னை அணியும் போரடும் என தெரிகிறது.
2022 ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர் கொண்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ், ஃபீல்டிங் தேர்வு செய்தது.
தோனியின் கடைசி பந்து பவுண்டரியுடன் முடிந்திருக்கும் முதல் இன்னிங்ஸ் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்திருக்கிறது சென்னை அணி. இந்த சீசனில் இன்னும் இரு அணிகளும் முதல் வெற்றியைப் பதிவு செய்யாத நிலையில், இலக்கை எட்ட லக்னோ அணியும், கட்டுப்படுத்தும் முனைப்பில் சென்னை அணியும் போரடும் என தெரிகிறது.
7000 T20 runs for Jersey no. 7!🥳💛#Dhoni #Whistlepodu #IPL2022 pic.twitter.com/KpxACPyo0Z
— MS Dhoni Fans Official (@msdfansofficial) March 31, 2022
இந்த போட்டியில் 16* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் தோனி. இந்த போட்டியில் ரன் சேர்த்தது மூலம் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்திருக்கிறார். மேலும், இந்த சாதனையை எட்டி இருக்கும் முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெருகிறார்.
விராட் கோலி | 10326 ரன்கள் |
ரோஹித் ஷர்மா | 9936 ரன்கள் |
சுரேஷ் ரெய்னா | 8654 ரன்கள் |
ஷிகர் தவான் | 8818 ரன்கள் |
ராபின் உத்தப்பா | 7120 ரன்கள் |
தோனி | 7001 ரன்கள் |
விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ராபின் உத்தப்பாவை அடுத்து டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்திருக்கும் ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்