மேலும் அறிய

IPL 2022: ஐ.பி.எல் 2022: மீண்டும் முதல் போட்டியில் மோதும் சென்னை - மும்பை....பின்னணி என்ன?

சென்னை அணி 6 முறை சீசனின் முதல் போட்டியில் ஆடியிருப்பதை போல, மும்பை அணி 8 முறை சீசனின் முதல் போட்டியில் ஆடியுள்ளது.

ஐ.பி.எல் இன் 14 வது சீசன் சமீபத்தில் துபாயில் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில், அதற்குள் அடுத்த ஐ.பி.எல் சீசன் பற்றிய செய்திகள் வெளியாக தொடங்கியுள்ளது. ஐ.பி.எல் சீசன் 15 முழுக்க முழுக்க இந்தியாவில் வைத்து மட்டுமே நடக்கும் என்றும் முதல் போட்டியிலேயே மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதவிருப்பதாகவும், அந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கிளப்பியுள்ளது. 2008 இல் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டது. அந்த தொடக்க சீசனிலிருந்து நடந்து முடிந்திருக்கும் 14 வது சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் மொத்தம் 6 முறை சீசனின் முதல் போட்டியில் ஆடியிருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக மட்டும் 4 முறை மோதியுள்ளது. அதாவது, சென்னை Vs மும்பை அணிகள் சீசனின் முதல் போட்டியில் இதுவரை நான்கு முறை மோதியுள்ளன. இதில் இரண்டு முறை சென்னையும் இரண்டு முறை மும்பை அணியும் என சம அளவில் வென்றிருக்கின்றன.
 
சென்னை அணி 6 முறை சீசனின் முதல் போட்டியில் ஆடியிருப்பதை போல, மும்பை அணி 8 முறை சீசனின் முதல் போட்டியில் ஆடியுள்ளது. 2008, 2010, 2013, 2017 இந்த நான்கு சீசன்களில் மட்டுமே சென்னை அல்லது மும்பை என இரண்டு அணிகளுமே இல்லாமல் வேறு அணிகள் சீசனின் முதல் போட்டியில் ஆடியிருக்கின்றன. ஆக, மொத்தம் 14 சீசன்களில் 10 இல் சென்னை அல்லது மும்பை இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ சீசனின் முதல் போட்டியில் ஆடியிருக்கின்றன.
 
இப்போது வெளியாகியிருக்கும் செய்திப்படி, அடுத்த சீசனின் தொடக்க போட்டியிலும் மீண்டும் ஒரு முறை சென்னை மற்றும் மும்பை அணிகளே மோதவிருக்கின்றன.
 
ஏன் இப்படி?
 
மொத்தம் 8 அணிகள், அடுத்த சீசனில் புதிதாக இரண்டு அணிகள் வருவதால் மொத்தம் 10 அணிகள். இத்தனை அணிகள் இருந்தும் சென்னை, மும்பை இரண்டு அணிகளே பெரும்பாலும் முதல் போட்டியில் ஆடுகின்றன. அது ஏன்?
 
ஐ.பி.எல் ஐ சுற்றி நடக்கும் வணிகமே அதற்கு மிக முக்கிய காரணம். சென்னை சூப்பர் கிங்ஸ் தோனி எனும் மிகப்பெரிய நட்சத்திர வீரரால் வழிநடத்தப்படும் அணி மேலும் 4 முறை ஐ.பி.எல் இல் கோப்பையை வென்றிருக்கிறது. பல முறை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற அணி. இன்னொரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரால் வழிநடத்தப்பட்ட அணி. அவருக்கு பிறகு இப்போதைய சூப்பர் ஸ்டாரான ரோஹித் சர்மாவின் வழிநடத்தலில் 5 முறை கோப்பையை வென்ற அணி. இந்த காரணங்களால் இரண்டு அணிகளுக்குமே வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த அணிகளின் ரசிகர் எண்ணிக்கையை மற்ற அணிகளோடு ஒப்பிடவே முடியாது. இவர்களின் ரசிகர் வட்டம் மிகப்பெரியது. இந்த விஷயம்தான் இந்த அணிகளை சீசனின் ஓப்பனிங் போட்டியில் ஆட வைக்கிறது. இந்த இரண்டு அணிகளும் முதல் போட்டியில் ஆடி பரபரப்பை கிளப்பும் போது ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் தொடக்கத்திலிருந்தே ஐ.பி.எல் இன் மீது முழுக்கவனத்தையும் செலுத்தும். அது ஐ.பி.எல் வணிகத்திற்கும் பெரும் ஊக்கமாக இருக்கும். அதேநேரத்தில், வேறு அணிகள் மோதினால் அந்தளவுக்கு வரவேற்பு இருக்காது.
 
கடைசியாக நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசன் கொரோனா காரணமாக இரண்டு பாதிகளாக நடந்திருந்தது. முதல் பாதி தடைபட்டு, இரண்டாம் பாதி துபாயில் தொடங்கிய போது பழைய அட்டவணைப்படி இல்லாமல், புதிதாக ஒரு அட்டவணையை உருவாக்கி சென்னையும் மும்பையும் மும்பையும் முதல் போட்டியில் ஆடுவது போல் மாற்றப்பட்டிருந்தது. ஐ.பி.எல் இன் வியாபார கணக்குகளை இதன் மூலமே புரிந்துக் கொள்ளலாம்.

IPL 2022: ஐ.பி.எல் 2022: மீண்டும் முதல் போட்டியில் மோதும் சென்னை - மும்பை....பின்னணி என்ன?
 
சில நாட்களுக்கு முன்பு சென்னை அணியின் வெற்றிக்கொண்டாட்டம் நடைபெற்றிருந்தது. அதில், ஐ.பி.எல் சேர்மனான ப்ரிஜேஸ் படேல் '“கிரிக்கெட் நிர்வாகிகளான நாங்கள், CSK நன்றாக விளையாடவேண்டும் என்றுதான் நாங்கள் எப்போதும் நினைப்போம். அப்போதுதான் TRP கூடும். ஏனெனில் சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் வேறு எதையும் பார்க்கமாட்டார்கள்” என வெளிப்படையாகவே பேசியிருப்பார். சென்னையும் மும்பையும் முதல் போட்டியில் மோதுவதற்கான காரணம் இதுவே.
 
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு  பிறகு அடுத்த ஆண்டுதான் முழுமையாக ஒரு சீசன் இந்தியாவில் வைத்து நடைபெறப்போகிறது. இதற்கு மிகப்பெரிய வரவேற்பை உண்டாக்க வேண்டுமெனில் சென்னையும் மும்பையுமே முதல் போட்டியில் மோதியாக வேண்டும். 
 
ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் போட்டியும் ஜுன் முதல் வாரத்தில் இறுதிப்போட்டியும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பிசிசிஐ விரைவிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget