Watch Video: டிஜே ஸ்டைல்.. ராயுடுவிடம் சேட்டை செய்யும் பிராவோவின் வைரல் நடன வீடியோ !
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மும்பை சென்றடைந்தது.
ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர். பல்வேறு அணிகளின் வீரர்களும் தங்களுடைய நாடுகளிலிருந்து மும்பை வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் குஜராத் மாநிலத்தின் சூரத்தில் தன்னுடைய பயிற்சியை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் இன்று சென்னை அணி சூரத்தில் தன்னுடைய பயிற்சியை முடித்து கொண்டு மும்பை சென்றது. சென்னை அணி மும்பை சென்றது தொடர்பாக சில வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து நேற்று இரவு சூரத் பயிற்சியின் போது சென்னை அணியின் வீரர் பிராவோவின் நடனம் தொடர்பான வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
Wrapping up the Surat party in DJ style! 🕺🥳#WhistlePodu #Yellove 🦁💛 @DJBravo47 pic.twitter.com/corpdpBsHR
— Chennai Super Kings (@ChennaiIPL) March 22, 2022
இந்த வீடியோவை பதிவிட்டு சிஎஸ்கே, “சூர்த் பார்டியை டிஜி பிராவோவின் ஸ்டைலில் முடித்து கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் சிஎஸ்கே அணியின் வீரர் பிராவோ நடனம் ஆடும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பிராவோ வீடியோவின் கடைசியில் அம்பத்தி ராயுடுவிடம் சென்று சேட்டை செய்வது போல் முடிகிறது. இந்த வீடியோவை சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். அத்துடன் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
முன்னதாக நேற்று எதற்காக சூரத்தில் பயிற்சி செய்கிறோம் என்பது தொடர்பாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “நாங்கள் கடந்த ஒரு வாரமாக இங்கு சிறப்பாக பயிற்சி செய்து வருகிறோம். அனைத்து அணிகளும் மும்பையில் பயிற்சி செய்வதால் எங்களுக்கு பயிற்சி செய்ய சிக்கலாக இருந்திருக்கும். ஆகவே தான் நாங்கள் மும்பைக்கு பதிலாக அதே போன்று சூழல் உள்ள சூரத் நகரை பயிற்சிக்கு தேர்ந்தெடுத்தோம். இந்த முழு ஆடுகளமும் எங்களுக்கு கிடைத்தது. இதன்காரணமாக நீண்ட நேரம் நாங்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டோம். அத்துடன் சில பயிற்சி போட்டிகளும் விளையாடினோம். இது எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க:ரன் அவுட் சர்ச்சையில் தொடங்கி ஒரே ஐபிஎல் அணி வரை- பட்லர்-அஷ்வின் நட்புப் பயணம் !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்