IPL 2022: சூரத்தில் சூப்பர் கிங்ஸ்... சென்னை அணி வெளியிட்ட குஜால் வீடியோ... குஜராத்தில் தோனிப் படை!
IPL 2022: ஸ்லோ மோஷனவில் இறங்கி, ஸ்பீடு மோஷனில் பயிற்சியில் பறக்க விடும் சென்னை அணியின் கிளிப்ஸ்கள், காண்போரை புல்லரிக்க வைக்கிறது.
ஐபிஎஸ் ஜூரம் ஆரம்பித்துவிட்டது. அணிகள் ஏலத்திற்குப் பின், இன்னார் தான் இன்னார் அணியில் விளையாடப் போகிறார் என்பது உறுதியானது. அதன் பின், ஐபிஎல்., அணியின் செல்லப்பிள்ளைகள் சிலர் சொந்த அணி திரும்பினர். பலர், வேறு அணிகளுக்கு மாறினர். அனைத்தையும் ஏலம் தீர்மானித்தது.
எது, எதை தீர்மானித்தாலும் பலரின் எதிர்பார்ப்பு, தோனி இந்த ஆண்டு விளையாடுவாரா என்பது தான். அது உறுதி செய்யப்பட்டு, சென்னை அணியின் கெத்து கேப்டனாக தொடர்கிறார் தோனி. ‛தல’ தோனி தலைமையிலான படை, களத்தில் கலக்கப் போவதை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. அணி தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டும் அலற விடுகிறது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், சற்று முன் இன்ஸ்டாவில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் எண்ட்ரி ஆகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, கோலாகலமாக வரவேற்கிறது ரசிகர் கூட்டம். கட்அவுட், கலாட்டா, காகித மழை என வழக்கமான அதே உற்சாகத்துடன் மைதானத்திற்கு பயிற்சிக்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ்ஸை, சூரத்தில் உள்ள அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
ஸ்லோ மோஷனவில் இறங்கி, ஸ்பீடு மோஷனில் பயிற்சியில் பறக்க விடும் சென்னை அணியின் கிளிப்ஸ்கள், காண்போரை புல்லரிக்க வைக்கிறது. அதிலும் ‛தல’ தோனி எண்ட்ரி... கொல மாஸ். வெறும் வீடியோவாக இல்லாமல், யுவன்சங்கர்ராஜாவின் இசையோடு, பரபர எடிட்டிங்கோடு வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, முன்கூட்டியே பயிற்சியில் இறங்கியுள்ள சென்னை அணி, அங்கு நடைபெறும் போட்டிகளை புரட்டியெடுக்கப் போகிறது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.
இதோ தோனிப்படை குஜராத்தில் குஜால்படுத்திய அந்த வீடியோ...
View this post on Instagram
சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளின் அட்டவனை விபரம் இதோ:
View this post on Instagram