LSG vs RCB : பெங்களூர் உள்ளே... லக்னோ வெளியே... கேஎல் ராகுலின் போராட்டம் வீண்.. 14 ரன்கள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மழை காரணமாக போட்டி முக்கால் மணிநேரம் தாமதாமாக தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பீல்டிங் தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய பெங்களுர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் அடித்து லக்னோ அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் டி காக் களமிறங்கினர். கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசி லீக் சுற்றில் 140 ரன்கள் குவித்த டி காக் இந்த போட்டியில் 5 பந்துகளில் 6 ரன்கள் அடித்து சிராஜ் வீசிய முதல் ஓவரில் அவுட்டானார்.
Wicket in the first over for @RCBTweets, courtesy @mdsirajofficial! 👏 👏#LSG lose Quinton de Kock as #RCB captain Faf du Plessis takes the catch.
— IndianPremierLeague (@IPL) May 25, 2022
Follow the match ▶️ https://t.co/cOuFDWIUmk #TATAIPL | #LSGvRCB pic.twitter.com/8EPK69TQZf
அதன்பிறகு வந்த மனன் வோஹ்ரா 11 பந்துகளில் 19 ரன்கள் அடித்து அவுட் ஆக, கேஎல் ராகுலுடன் இணைந்த தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். லக்னோ அணி 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கேஎல் ராகுல் 43 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஹசரங்கா வீசிய 15 வது ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து தீபக் ஹூடா கீளீன் போல்டானார். ஒரு கட்டத்தில் 16 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் ஸ்டோய்னிஸ் 9 ரன்களில் வெளியேறினார்.
லக்னோ அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 33 ரன்கள் தேவையா இருக்க பெங்களூர் அணியிலிருந்து ஹசல்வுட் வீச வந்தார். ஹசல்வுட் தொடர்ந்து மூன்று பந்துகள் வைட் வீச, அடுத்த பந்தே பொறுமை காட்டிய ராகுல், ஷாபாஸ் அகமதிடம் கேட்ச் கொடுத்து 79 ரன்களில் வெளியேறினார். அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட குர்னால் பாண்டியாவும் தான் சந்தித்த முதல் பந்தே அவுட்டானார்.
Is this the game for @RCBTweets then❓
— IndianPremierLeague (@IPL) May 25, 2022
Josh Hazlewood strikes in the 19th over. 👏 👏
KL Rahul departs after a brilliant 79.
Follow the match ▶️ https://t.co/cOuFDWIUmk #TATAIPL | #LSGvRCB pic.twitter.com/Gcc4rcY8N0
6 பந்துக்கு 24 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் லீவிஸ் ஹர்ஷல் பட்டேல் பந்தை சந்தித்து முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்து டாட், அதுக்கு அடுத்த பந்தில் சமீரா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். அடுத்தடுத்த 2 பந்துகளை ஹர்ஷல் பட்டேல் டாட் வீச பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்