SRH vs CSK: 7 விக்கெட்டுகளில் 6 கேட்சுகள்! 134 ரன்களுக்கு ஹைதராபாத்தை சுருட்டிய சென்னை!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக 100 கேட்சுகளை எடுத்து நிறைவு செய்துள்ளார் தோனி. தனது கிரிக்கெட் கரியரில், ஐபிஎல்லில் மேலும் ஒரு புதிய மைல்கல்லை எட்டினார்.
2021 ஐபிஎல் சீசனின் இரண்டாம் பாதி போட்டிகளில், இன்று ஷார்ஜாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணி, இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் செல்வது உறுதியாகிவிடும். இந்த சீசனில் சொதப்பலாக பர்ஃபாம் செய்துள்ள ஹைதராபாத், புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. அதனால், இனி வரும் போட்டிகளில் ஆறுதல் வெற்றிகளை பெற்று ஆசுவாசப்படுத்தி கொள்ளலாம் அந்த அணி.
இன்று டாஸ் வென்ற கேப்டன் தோனி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணிக்காக ஜேசன் ராய், சாஹா ஓப்பனிங் களமிறங்கினர். போட்டி தொடங்கிய முதல் 3 ஓவர்களில், பெரிதாக ரன் சேர்க்காத ஹைதராபாத் அணி நான்காவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. ஹேசல்வூட் வீசிய பந்து, பேட்டில் பட்ட மாதிரியே தெரியாமல் பாட்டம் எட்ஜில் பட்டு தோனியிடம் கேட்ச்சானது அந்த பந்து. அவரை அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன், பிராவோவின் முதல் ஓவரில் சிக்கி கொண்டார். எல்பிடபிள்யூவால் 11 ரன்களுக்கு வெளியேறினார் அவர். சாம் கரணுக்கு பதிலாக பிராவோவை எடுத்ததற்கு பலன் என்பதைப் நிரூபிக்கும் வகையில், பிராவோவுக்கான அடுத்த ஓவரில் இன்னொரு ஓவரை பெற்றுத்தந்தார். ப்ரியம் கார்க் 7 ரன்களுக்கு வெளியேறினார். இதனால், 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி.
மேட்சை வெல்லும் கேட்ச்
ஹைதராபாத் அணியின் ஒரே நம்பிக்கையான சாஹாவும் 44 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜாவின் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முதல் இன்னிங்ஸின் 14வது ஓவர் முடிவதற்குள்ளாகவே தோனி 3 கேட்சுகளை பிடித்து அசத்தினார். நான்கில் 3 விக்கெட்டுகள் தோனியின் கேட்சுகளால் சிக்கியது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக 100 கேட்சுகளை எடுத்து நிறைவு செய்துள்ளார் தோனி. தனது கிரிக்கெட் கரியரில், ஐபிஎல்லில் மேலும் ஒரு புதிய மைல்கல்லை எட்டினார்.
ஹேசல்வுட் - 3; ஜடேஜா- 1 ; தாகூர் -1 ; பிராவோ - 2; தோனிக்கு 3! (கேட்சுகள்)
(C) Dhoni X 100!😍#SRHvCSK #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/vsRr4xesr1
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 30, 2021
போட்டியின் கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே பெளலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். முக்கியமாக, சிஎஸ்கேவின் சிறப்பான ஃபீல்டிங்கால் கேட்ச் கொடுத்து அடுத்தடுத்து வெளியேறினர் ஹைதராபாத் பேட்டர்கள். ஐந்து விக்கெட்டுக்கு களத்தில் நின்ற அபிஷேக் ஷர்மா, அப்தும் சமத்தும் டுப்ளெஸி, மொயின் அலி ஆகியோரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினர். டெத் ஓவர்களில் களமிறங்கிய ரஷீத் கான், ஜேசன் ஹோல்டரும் பெரிதாக சோபிக்கவில்லை. தாகூர் வீசிய 19வது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஹோல்டர். இதனால், 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி.
இதுவரை இரு அணிகளும்...
ஐ.பி.எல். வரலாற்றைப் பொறுத்தவரை இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் விளையாடியுள்ளன. அவற்றில் 4 போட்டிகளில் மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெற்று வரும் ஷார்ஜா மைதானத்தில் இரு அணிகளும் ஒரு போட்டியில் மட்டும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த போட்டியில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசி 5 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 போட்டியிலும், சென்னை அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி 2 முறை முதலில் பேட்டிங் செய்தும், 2 முறை இரண்டாவது பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி 5 முறை முதலில் பேட்டிங் செய்தும், 7 முறை இரண்டாவது முறை பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது.