SRH vs CSK Live: இந்த சீசனில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி
இன்று போட்டி நடைபெற உள்ள ஷார்ஜா மைதானத்தில் இரு அணிகளும் ஒரு போட்டியில் மட்டும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த போட்டியில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது

Background
ஐ.பி.எல். தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை அணியும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த தொடரில் அசுர பலத்துடன் உள்ள சென்னை அணியை ஹைதராபாத் அணி எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதே ஹைதராபாத் அணி ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றைப் பொறுத்தவரை இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் விளையாடியுள்ளன. அவற்றில் 4 போட்டிகளில் மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெற உள்ள ஷார்ஜா மைதானத்தில் இரு அணிகளும் ஒரு போட்டியில் மட்டும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த போட்டியில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது.




















