RR vs RCB Live: 100 ரன்களை அடித்த பெங்களூர் அணி 42 பந்தில் 44 ரன்கள் எடுத்தால் வெற்றி, களத்தில் மேக்ஸ்வெல்..!
ஐபிஎல் வரலாற்றில், இதுவரை 21 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளனர். இதில், பெங்களூரு அணி 11 முறையும், ராஜஸ்தான் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
LIVE
Background
2021 ஐபிஎல் தொடரின் 43-வது போட்டியில், கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் துபாய் மைதானத்தில் இன்று மோத உள்ளன. தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியும், ஏழாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும் மோத உள்ளன.
இந்த சீசனில் இதற்கு முன் இரு அணிகளும் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து சேஸிங் களமிறங்கிய பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அதிரடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஓப்பனிங் களமிறங்கிய படிக்கல் (101*), கோலி (72*) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஐபிஎல் வரலாற்றில், இதுவரை 24 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளனர். இதில், பெங்களூரு அணி 11 முறையும், ராஜஸ்தான் அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் முடிவு எட்டப்படாமல் அல்லது விளையாடாமல் முடிக்கப்பட்டது. 2020 சீசனின்போது துபாய் மைதானத்தில் இரு அணிகளும் மோதிய போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
100 ரன்களை அடித்த பெங்களூர் அணி 42 பந்தில் 44 ரன்கள் எடுத்தால் வெற்றி, களத்தில் மேக்ஸ்வெல்..!
12.4 ஓவரில் 100 ரன்கள் அடித்த பெங்களூர் அணி. அந்த அணி தற்போது 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 18, பரத் 33. 42 பந்தில் 44 ரன்கள் எடுத்தால் வெற்றி.
100 up for RCB in the 13th over!
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 29, 2021
They need 33 from 42 balls, with 8 wickets in hand - can Rajasthan Royals find something to hold them off? #IPL2021
10 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 79/2
10 ஓவர் முடிவில் பெங்களூர் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. மேக்ஸ்வெல் 9, பரத் 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
2ஆவது விக்கெட்டை இழந்தது பெங்களூர் அணி - கேப்டன் கோலி ரன் அவுட் ஆனதால், ரசிகர்கள் அதிர்ச்சி
பெங்களூர் அணி இரண்டாவது விக்கெட்டை இழந்தது. நன்றாக விளையாடி வந்த கோலி 25 ரன்களில் ரன் அவுட் ஆனார். 7 ஓவர் முடிவில் 59/2
Virat Kohli is run-out for 25.
— IndianPremierLeague (@IPL) September 29, 2021
Brilliant from Parag! Absolutely sensational fielding from @ParagRiyan as Kohli departs.
Live - https://t.co/4IK9cxv4qg #RRvRCB #VIVOIPL pic.twitter.com/xZAT6G0huR
பவர்பேளயில் 50 ரன்கள், முதல் விக்கெட்டை இழந்த ஆர்சிபி...பொறுப்புடன் விளையாடும் கோலி
பவர்பேளயில் 50 ரன்கள் அடித்த ஆர்சிபி, முதல் விக்கெட்டையும் இழந்தது. படிக்கல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்கோர் 54/1 கோலி 23
5ஆவது ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி
5ஆவது ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி மட்டும். ஸ்கோர் 48-0