மேலும் அறிய

IPL 2014 Recap: பரபரப்பான போட்டிகள் : 2-வது முறை கோப்பையை வென்ற கொல்கத்தா அணி! 7- வது சீசன் ரீவைண்ட்!

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.

ஐ.பி.எல் தொடர்பாக நாம் ஏற்கனவே ஐ.பி.எல் ரீகேப் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டு குறித்தும் விரிவான ரீவைண்ட் கட்டுரைகளை ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர்பான ரீவைண்டை இந்த தொகுப்பில் காணலாம். 

இரண்டாவது முறை கோப்பையை வென்ற கொல்கத்தா அணி:

கெளதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றது.  அந்த வகையில் முதலில் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தது. பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இதன் மூலம் 7-வது சீசனின் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அதன்படி, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு மணீஸ் பாண்டேவின் அரைசதம் முக்கியமாக இருந்தது.  இந்த போட்டியில்தான் பஞ்சாப் அணி வீரர் விருத்திமன் சாஹா 55 பந்துகளில் 10 பவுண்டரிகள் 8 சிக்ஸர்களை விளாசி 115 ரன்களை விளாசி இருந்தார். 

முக்கிய வீரர்கள்:

இந்த சீசனில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ராபின் உத்தப்பா 5 அரை சதங்களுடன் 660 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.  அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மோகித் சர்மா 23 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை கைப்பற்றினார். அதிக சிக்ஸர்களை விளாசிய வீரராக பஞ்சாப் அணி வீரர் மேக்ஸ்வெல் இருந்தார்.

அவர் 16 போட்டிகள் விளையாடி 36 சிக்ஸர்களை விளாசினார். ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரராக சேவாக் அறியப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேவாக் 122 ரன்களை குவித்தார். அதிக கேட்சுகளை பிடித்த வீரர் என்ற பெருமையை மில்லர் பெற்றார். அவர் 14 கேட்சுகளை பிடித்தார்.

அதிக ரன்களை குவித்த அணி:

இறுதிப்போட்டி வரை வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி தான் 2014 ஆம் ஆண்டு அதிக ரன்களை குவித்த அணியாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை குவித்து இந்த சாதனையை அந்த அணி படைத்தது.  அடுத்தடுத்த இடங்களிலும் பஞ்சாப் அணி தான் இருந்தது. சென்னை அணிக்கு எதிரான மற்றொரு போட்டியில் 226 ரன்கள், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 211 ரன்கள் மீண்டும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 206 ரன்களை குவித்தது:

அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்தது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 93 ரன்கள் வித்தியாசட்த்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த சாதனையை சி.எஸ்.கே அணி செய்தது.

சதம் அடித்த வீரர்கள்:

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் மூன்று வீரர்கள் மட்டுமே சதம் விளாசினார்கள். அதன்படி பஞ்சாப் அணி வீரர் விரேந்திர சேவாக் 1 சதம், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் லெண்டல் சிம்மன்ஸ் 1 சதம், மற்றொரு பஞ்சாப் வீரரான விருத்திமான் சாஹா  1 சதம் விளாசியிருந்தார். 

பரபரப்பான போட்டிகள்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்), போட்டி 11: 

சார்ஜாவில் நடைபெற்ற 7 வது சீசனின் 11 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கெளதம் கம்பீர் கோல்டன் டக் அவுட்டாகினார், மணீஷ் பாண்டேயும் அதிக நேரம் நீடிக்கவில்லை. இரண்டு விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி  10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த சூழலில் களம் இறங்கிய ஜாக் காலிஸ் மற்றும் அறிமுக வீரர் கிறிஸ் லின் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 80 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் வந்த ராபின் உத்தப்பா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் ஓரள்விற்கு ரன்களை சேர்க்க கேகேஆர் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுக்க உதவியது. பின்னர், களம் இறங்கிய பெங்களூர் அணி வீரர்கள்  யோகேஷ் தகாவாலே மற்றும் பார்த்தீவ் படேல் ஆகியோர்  7.4 ஓவர்களில் 67 ரன்கள் சேர்த்தனர். பின்னர் வந்த விராட் கோலியும் யுவராஜ் சிங்கும் சிறப்பாக விளையாடினார்கள். சுனில் நரைனின் பந்துவீச்சில் கோலி விக்கெட்டை பறிகொடுக்கும் போது பெங்களூர் அணி 122 ரன்களை எடுத்தது.  யுவராஜ் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் களத்தில் நின்றனர். 

 34 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து யுவராஜ் வெளியேற RCB எட்டு பந்துகளில் 10 ரன்கள் எடுத்தது. மூன்று பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டி வில்லியர்ஸ் வினய் குமாரின் பந்தில்  அவுட் ஆனார். அவரது கேட்சை பிடித்தவர் கிறிஸ் லின். அந்த கேட்ச் தான் பெங்களூர் அணியை தோல்வி அடைய செய்தது. அந்த போட்டியில் பெங்களூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) vs ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்), போட்டி 19: 

ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. கருண் நாயர் சீக்கிரம் அவுட் ஆனார், மேலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினார். 

அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் 64 ரன்களுக்கு ஒரு நல்ல கூட்டணியை அமைத்தனர். பின்னர் வந்த ஸ்டூவர்ட் பின்னி கோல்டன் டக் ஆனார். ரஹானே 72 ரன்களில் ஆட்டமிழந்தார், ஸ்டீவன் ஸ்மித் 11 பந்துகளில் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் அணி  5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது. பின்னர் சூப்பர் ஓவர் வைக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் ஒரு அணிகளும் 11 ரன்கள் எடுத்தது.

சூப்பர் ஓவர் முடிவில் ஒரு அணிகளும் 11 ரன்கள் எடுத்ததால் பவுண்டரிகள் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கொல்கத்தா வீரர் மணீஸ் பாண்டே சிக்ஸர் அடித்து இருந்தாலும் பவுண்டரியின் அடிப்படையிலேயே வெற்றி முடிவு செய்யப்பட்டதால் ஷேன் வாட்சன் அடித்த பவுண்டரியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

மேலும் படிக்கVirat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்கWatch Video: என்ன ஹீரோயிசமாசர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
Rasipalan Today Nov 15: தனுசுக்கு விலகிச் சென்றவர்கள் வருவார்கள்! அப்போ உங்க ராசிக்கு என்ன வரும்?
Rasipalan Today Nov 15: தனுசுக்கு விலகிச் சென்றவர்கள் வருவார்கள்! அப்போ உங்க ராசிக்கு என்ன வரும்?
Embed widget