DC vs GT Innings Highlights: கடைசி ஓவரில் காட்டடி அடித்த ரிஷப் பண்ட்; குஜராத் அணிக்கு 225 ரன்கள் இலக்கு!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.
ஐ.பி.எல் சீசன் 17:
ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று ஏப்ரல் 24 நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்தவகையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் களம் இறங்கினார்கள். இவர்களது ஜோடி அதிரடியாக விளையாடி 35 ரன்களை சேர்த்த போது மெக்குர்க் ஆட்டமிழந்தார். மொத்தம் 14 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர் உட்பட மொத்தம் 23 ரன்கள் எடுத்தார்.
அக்ஸர் படேல் - ரிஷப் பண்ட் அதிரடி:
இதனிடையே 7 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற பிருத்வி ஷா 7 பவுண்டரிகள் உட்பட 11 ரன்கள் எடுத்தார். பின்னர் அக்ஷர் படேல் களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஷாய் ஹோப் மறுபுறம் 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் களம் இறங்கினார். அக்ஸர்படேலுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனிடையே அரைசதத்தை பதிவு செய்தார். அந்த வகையில் மொத்தம் 43 பந்துகள் களத்தில் நின்ற 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 66 ரன்களை குவித்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிவந்த ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் போட்டியில் 2 வது அரைசதத்தை சிக்ஸர் உடன் பதிவு செய்தார். 20 வது ஓவரில் மட்டுமே 4 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரிகளை விளாசினார் பண்ட். 20 ஓவர்கள் முடிவின்படி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்களை எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
📸 Captain's Knock! 👏
— IndianPremierLeague (@IPL) April 24, 2024
Follow the Match ▶️ https://t.co/48M4ajbLuk#TATAIPL | #DCvGT | @RishabhPant17 pic.twitter.com/9Lz1WhwdJL
கடைசி வரை களத்தில் நின்ற ரிஷப் பண்ட் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் என மொத்தம் 88 ரன்களை குவித்தார். அதேபோல் ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 26 ரன்களை குவித்தார். 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களம் இறங்க உள்ளது.