Dwayne Bravo On Mumbai: ”ஃபைனல்ல மும்பை வேணாமே, பயமா இருக்கு”.. சிஎஸ்கே அணியின் த்வெயின் பிராவோ பேச்சு
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை அணி மட்டும் வரவேண்டாம் என, சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் த்வெயின் பிராவோ பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை அணி மட்டும் வரவேண்டாம் என, சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் த்வெயின் பிராவோ பேசியுள்ளார்.
பிராவோ பேசியது என்ன?
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அந்த போட்டிக்கு பிறகான பேட்டியில், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே தொடரும் போட்டி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய பிராவோ, இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக மும்பை அணி களம் காண கூடாது என தனிப்பட்ட முறையில் நான் விரும்புகிறேன். மும்பை அணியை கண்டு நான் பயப்படுகிறேன் (புன்னகையுடன்). எனது நண்பன் பொல்லார்டிற்கும் அது தெரியும். இருந்தாலும் இதை நாங்கள் அப்படி பர்க்கவில்லை. தொடரில் மீதமுள்ள அனத்து அணிகளுமே ஆபத்தானவை தான். அவ தரமான அணிகளும் கூ. எங்களுக்கு எதிராக விளையாட உள்ள அணியை யார் என்பதை எதிர்பார்த்து இருக்கிறேன். யாராக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்” என குறிப்பிட்டார்.
தொடரும் மும்பையின் ஆதிக்கம்:
பிராவோ சற்றே நகைச்சுவையாக கூறி இருந்தாலும், சென்னை அணி மீது மும்பை எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பதை அவரது பேச்சு விளக்குகிறது. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிகளில் மட்டும் நான்குமுறை இந்த அணிகள், நேருக்கு நேர் மோதியுள்ளnஅ. அதில் மும்பை அணி 2013, 2015 மற்றும் 2019 என மூன்று முறை சென்னை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதேநேரம், இரு அணிகளும் முதல்முறையாக இறுதிப்போட்டிகளில் விளையாடிய, 2010ம் அண்டு மட்டும் சென்னை அணி வெற்றி பெற்று தனது முதல் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
லீக் சுற்றிலும் விடாத மும்பை:
ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது முதலே இரு அணிகளும் விளையாடி வரும் நிலையில், பிளே ஆஃப் சுற்றில் மட்டுமின்றி லீக் சுற்றுகளிலும் மும்பை அணியின் கையே ஓங்கியுள்ளது. இரு அணிகளும் இதுவரை மொத்தமாக 36 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 20 முறை மும்பை அணி தான் கைப்பற்றியுள்ளது.
அனல் பறக்கும் போட்டி:
இதன் காராணமாகவே சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டிக்கு மட்டும் ரசிகர்களிடையேயான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்து காணப்படும். மைதானங்களில் வீரர்கள் போட்டி போட, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து கடுமையான வாக்கு வாதங்களில் ஈடுபடுவர். ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ எனப்படும் இந்த இரு அணிகள் விளையாடும் போட்டிக்கு, தொலைக்காட்சிகள் டிஆர்பி ரேட் எகிறும். டிஜிட்டல் தளங்களிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கோடிகளை கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.