Watch Video: "முஸ்தபா முஸ்தபா.." ரோகித் - ஹர்திக் பாண்டியா குதூகலம்..கொண்டாட்டம்!வைரல் வீடியோ!
மும்பை இந்தியன்ஸ் அணி ஏப்ரல் 7 ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது.
விறுவிறுப்பான ஐ.பி.எல்:
ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொள்ளும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது.
ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் மூன்று வெற்றிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. ஆனால், 5 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றிகூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
அந்தவகையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி என ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது அந்த அணி. இது மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் தான் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 7 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
ஜில் செய்யும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்:
That's one way to unwind and have some quality team time 🤩➡️ https://t.co/GyuukJgUDk
— Mumbai Indians (@mipaltan) April 5, 2024
Catch it all on #MIDaily now, available on our website and MI app 📹💙#MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/rwTLt8mMRi
இந்நிலையில் , தான் தொடர் தோல்வியில் இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கடும் மன அழுத்தத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்தது. அதாவது அடுத்த போட்டிக்கு இடையில் 7 நாட்கள் இருப்பதால் தனது அணி வீரர்களை ஜாம்நகருக்கு சுற்றுலா அனுப்பிவைத்துள்ளது.
இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஹிட்மேன் ரோகித் ஷர்மாவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் கட்டி அணைத்து ஒன்றாக மகிழ்ச்சியாக சுற்றுலாவை களிக்கின்றனர். இதை கண்ட மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் உற்சாகத்துடன் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல் இதே அன்போடு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் இருந்தால் இனிவரும் போட்டிகள் வெற்றி பெறலாம் என்று கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க: Shashank Singh PBKS: பெயர் குழப்பத்தால் மாற்றி எடுக்கப்பட்ட வீரர்! அனைவரின் கவனத்தையும் ஷஷாங்க் ஈர்த்தது எப்படி?
மேலும் படிக்க: Suryakumar Yadav: மாஸாக மீண்டு(ம்) வந்த சூர்யகுமார்; வெளியான கெத்து வீடியோ; குஷியில் ரசிகர்கள்!