GT vs RCB: விளாசிய கோலி... குஜராத் காலி! ப்ளே ஆஃப்பை குறிவைத்து ஆர்சிபி அசத்தல்!
இந்த வெற்றிக்குப் பிற்கு புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது ஆர்சிபி. இதனால் ஆர்சிபி அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நடப்புத் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி தற்போது வரை ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதை தேர்வு செய்தது. அதனை அடுத்து களமிறங்கிய அந்த அணியின் ஓப்பனர்கள் கில், சாஹா பெரிதாக சோபிக்கவில்லை. ஒன் டவுன் களமிறங்கிய வாடேவும் அவுட்டாக, கேப்டன் ஹர்டிக் பாண்டியா களத்தில் நம்பிக்கை அளித்தார்.
அரை சதம் கடந்து விளையாடிய அவர், 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 47 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த மில்லரும் சிறப்பாக அடிக்க, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு குஜராத் அணி 168 ரன்கள் சேர்த்தது.
இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - டுப்ளெசி ஓப்பனிங் களமிறங்கினார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். அரை சதம் கடப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் டுப்ளெசி. விக்கெட் சரிந்தாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 73 ரன்கள் எடுத்தார். இதனால், இலக்கை நெருங்கியது ஆர்சிபி. ஒன் டவுன் களமிறங்கிய மேக்ஸ்வெலும் அதிரடி காட்ட, 40 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி போட்டியை வென்றுள்ளது.
That's that from Match 67 as #RCB win by 8 wickets and are now 4th on the #TATAIPL Points Table.
— IndianPremierLeague (@IPL) May 19, 2022
Scorecard - https://t.co/TzcNzbrVwI #RCBvGT #TATAIPL pic.twitter.com/K7uz6q15qQ
இந்த போட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலம், ஆர்சிபி அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிற்கு புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. அத்துடன் அடுத்த போட்டியில் ஆர்சிபி அணி தற்போது உள்ள ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் டெல்லி அணி தன்னுடைய கடைசி போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்