GT vs MI, IPL 2023 Playing XI: வெற்றிக்காக முட்டி மோதும் குஜராத் - மும்பை அணிகள்.. பிளேயிங் லெவனில் யாருக்கெல்லாம் இடம்?
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று விளையாடும் நிலையில்,பிளேயிங் லெவனில் ஆடும் வீரர்கள் பற்றிய விவரங்களை காணலாம்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று விளையாடும் நிலையில்,பிளேயிங் லெவனில் ஆடும் வீரர்கள் பற்றிய விவரங்களை காணலாம்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்,ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோ சினிமா செயலியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
நடப்பு சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி ரசிகர்களின் பேராதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி மும்பை அணி இதுவரை 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேபோல் குஜராத் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதனால் வெற்றியை தொடர இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு தான் குஜராத் அணி ஐபிஎல் தொடரில் அறிமுகமான நிலையில் , மும்பை அணியுடன் இதுவரை ஒருமுறை மட்டுமே மோதியுள்ளது. அதிலும் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வியை தழுவியது.
இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம்
குஜராத் அணி: விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷூப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா
மும்பை அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
டாஸ் வென்ற மும்பை
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸுக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா, ” நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். ஆடுகளத்தை பார்த்தால், போட்டி சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம். கடந்த காலங்களில் சில தவறுகளை செய்தோம். அதை நாங்களே ஒப்பு கொள்கிறோம். அந்த சூழ்நிலையிலிருந்து நீங்கள் எப்படி மீண்டும் வருகிறீர்கள் என்பது முக்கியம், அது முக்கியமானது.
தோல்வி குறித்து நாங்கள் நன்றாக கலந்தாலோசித்தோம். இன்று எங்கள் அணியில் இரண்டு மாற்றங்கள் உள்ளன - ஹிருத்திக் ஷோக்கீன் பதிலாக குமார் கார்த்திகேயா களமிறங்குகிறார். மேலும், ஜோஃப்ராவுக்கு உடம்பு சரியில்லை. ரிலே அணிக்கு திரும்பி வந்துள்ளார்.” என்றார்.
தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், “ இன்று பிட்சானது நன்றாக இருக்கிறது. அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இருந்தது. நாங்கள் ஒரே அணியில் விளையாடுகிறோம். ஜோஷ் லிட்டில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார் “ என்றார்.