Dhoni | எனது கடைசி ஐபிஎல் போட்டி... சென்னை ரசிகர்களுக்கு தோனி சொன்ன நெகிழ்ச்சி வார்த்தைகள்!
சென்னையில்தான் தனது கடைசி போட்டியில் ஆடுவேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனுமாகியவர் மகேந்திர சிங் தோனி. நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் போட்டிகளில் சென்னை அணி வெற்றிகரமாக ஆடி வருகிறது. ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சென்னை அணி முன்னேறியுள்ளது.
Dhoni says fans can hopefully see his farewell game in Chennai. pic.twitter.com/MZHFMkPOQ4
— Santhosh Kumar (@giffy6ty) October 5, 2021
இந்த நிலையில், சென்னை ரசிகர்களிடையே தோனி காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடினார். அப்போது, தன்னுடைய கடைசி ஐ.பி.எல். போட்டியை சென்னையில் ரசிகர்கள் காணலாம் என்று நம்புவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதன் மூலம் அடுத்த வருடமும் தான் நிச்சயம் ஐபிஎல்க்கு வருவேன் என அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
3 உலக கோப்பையை வென்ற தோனி ஏற்கனவே இந்திய அணிக்கான அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.