மேலும் அறிய

DC vs PBKS, IPL 2023 LIVE: பஞ்சாபிடம் சரணடைந்த டெல்லி; சிறப்பான ஆட்டத்தால் 6வது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்..!

IPL 2023, Match 59, DC vs PBKS: பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

LIVE

Key Events
DC vs PBKS, IPL 2023 LIVE: பஞ்சாபிடம் சரணடைந்த டெல்லி; சிறப்பான ஆட்டத்தால் 6வது இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்..!

Background

PBKS vs DC IPL 2023: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

ஐபிஎல் சீசன்:

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது. ஆனாலும், இதுவரை ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. குஜராத் மற்றும் சென்னை அணிகள் மட்டுமே ஓரளவிற்கு வலுவாக முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக டெல்லியை தவிர மற்ற 7 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.

பஞ்சாப் - டெல்லி மோதல்:

இந்த சூழலில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ள, 59வது லீக் போட்டியில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடலஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ப்ளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை முற்றிலும் இழந்துள்ள டெல்லி அணிக்கு இந்த போட்டி புள்ளிப்பட்டியலில் தங்களை நல்ல நிலைக்கு முன்னேற்ற உதவும். ஆனால் பஞ்சாப் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் பஞ்சாப் அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க முடியும். 

பஞ்சாப் அணி நிலவரம்:

நடப்பு தொடரை அடுத்தடுத்து வெற்றிகளால் தொடங்கினாலும், கடந்த சில போட்டிகளாக பஞ்சாப் அணி பெரிதாக சோபிக்கவில்லை. வெற்றி, தோல்வி என மாறி மாறி முடிவுகளை பெற்று வருகிறது. கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் பஞ்சாப் அணி 3 தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால், 10 புள்ளிகளுடன்  8வது இடத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே இந்த அணி, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்த சூழலில் இன்றை போட்டியில் வென்று பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க பஞ்சாப் அணி முனைப்பு காட்டி வருகிறது.

டெல்லி அணி நிலவரம்:

வார்னர் தலைமையிலான டெல்லி அணி 11 போட்டிகளில் விளையாடி வெறும் 4 போட்டிகளில் மட்டும் வென்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன் மூலம், நடப்பு தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது. அதேநேரம்,  கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றி டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால், பார்ட்டி ஸ்பாய்லர் என குறிப்பிடும் வகையில், கடைசி நேரதில் பல அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பை டெல்லி அணி பறிக்கக்கூடும் என கருதப்படுகிறது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் கொல்கத்தா அணியிடம் டெல்லி தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

23:17 PM (IST)  •  13 May 2023

DC vs PBKS Live: தொடரில் இருந்து வெளியேறிய டெல்லி..!

டெல்லி அணி இந்த தோல்வி மூலம் ப்ளேஆஃப் வாய்ப்பை  முற்றிலும் இழந்தது. டெல்லி அணிக்கு இன்னும் இரண்டு லீக் போட்டிகள் உள்ளது. 

23:15 PM (IST)  •  13 May 2023

DC vs PBKS Live: புள்ளிப்பட்டியலில் முன்னேறிய பஞ்சாப்..!

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது.

23:11 PM (IST)  •  13 May 2023

DC vs PBKS Live: பஞ்சாப் வெற்றி..!

டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெடுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

23:11 PM (IST)  •  13 May 2023

DC vs PBKS Live: 16 ஓவர்கள் முடிவில்..!

16 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் சேர்த்துள்ளது. 

22:44 PM (IST)  •  13 May 2023

DC vs PBKS Live: விக்கெட்..!

இக்கட்டான சூழலில் பொறுப்புடன் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அமன் கான் 16 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை எல்லீஸ் பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.  

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
Embed widget