CSK vs SRH Live: சென்னை அணிக்கு 4வது தோல்வி..! வெற்றிக்கணக்கை தொடங்கிய சன்ரைசர்ஸ்..!
chennai super kings vs Sun risers hyderabad: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையேயான ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள 17ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளது. சிஎஸ்கே தனது முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்தது.
தோனி கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 38 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்த பிறகு, அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக 6 பந்தில் 16 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் 23 ரன்கள் எடுத்தார். நல்ல பார்மில் இருக்கும் தோனி அணியை வெற்றி பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் நன்றாக விளையாடுவார் என்று ரசிர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
டுவைன் பிராவோ பந்து வீச்சில் சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை கொடுக்கிறார். கடைசி மூன்று போட்டிகளிலும் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிராக மூன்று விக்கெட்டுகள் உட்பட ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு அவரின் பந்துவீச்சு இன்றைய போட்டியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு அதிமகாக இருக்கிறது.
அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா அவுட்...!
சன்ரைசர்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 50 பந்தில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தோல்வியின் விளிம்பில் சென்னை..!
சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 18 பந்தில் 11 ரன்கள் மட்டுமே தேதவப்படுவதால் சென்னை அணி தோல்வியின் விளிம்பில் போராடி வருகிறது.
100 ரன்களை கடந்த சன்ரைசர்ஸ்..! அதிரடியாக ஆடும் அபிஷேக் - திரிபாதி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இலக்கை நோக்கி ஆடிவரும் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை கடந்து அதிரடியாக வருகிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கு முதல் விக்கெட்..! ஆட்டத்தில் திருப்புமுனையா..?
சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் 40 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை வீரர் முகேஷ் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடும் அபிஷேக்..! நிதானம் காட்டும் வில்லியம்சன்..!
சென்னை அணிக்கு எதிராக சன்ரைசர்சின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா அதிரடியாகவும், கேப்டன் வில்லியம்சன் நிதானமாகவும் ஆடி வருகின்றனர். அபிஷேக் சர்மா 23 பந்தில் 39 ரன்னும், வில்லியம்சன் 31 பந்தில் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.