மேலும் அறிய

CSK vs MI: மிட்செல் சாண்ட்னருக்கு பதில் ஷர்துல் தாக்கூர்? சர்ச்சையில் மும்பை இந்தியன்ஸ்.. மௌனம் கலைத்த ஜெயவர்த்தனே!

IPL 2026: மிட்செல் சாண்ட்னருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் களமிறக்கப்பட்டது விதிகளுக்கு உட்பட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி மேற்கொண்ட 'கன்கஷன் சப்ஸ்டிடியூட்' (Concussion Substitute) விவகாரம் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மிட்செல் சாண்ட்னருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் களமிறக்கப்பட்டது விதிகளுக்கு உட்பட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடந்தது என்ன?

சிஎஸ்கே பேட்டர் கார்த்திக் சர்மா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது, மும்பை வீரர் மிட்செல் சாண்ட்னர் கீழே விழுந்து காயமடைந்தார். தரையில் விழுந்த வேகத்தில் அவர் தனது தோள்பட்டையை பிடித்துக்கொண்டு வலியால் துடித்தார். உடனடியாக அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

ஆனால், சிறிது நேரத்திலேயே சாண்ட்னருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக உள்ளே வருவார் என அறிவிக்கப்பட்டது. தோள்பட்டை காயத்திற்கு எப்படி 'தலைக்காயத்திற்கான' (Concussion) மாற்று வீரரை அனுமதிக்கலாம் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறந்தன.

மௌனம் கலைத்த மஹேல ஜெயவர்த்தனே

இந்த விவகாரம் குறித்து போட்டிக்குப் பிறகு விளக்கமளித்த மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்த்தனே கூறியதாவது:"அவர் விழுந்தபோது முதலில் தலை மற்றும் கழுத்துப்பகுதிதான் தரையில் மோதியது. தோள்பட்டையிலும் காயம் இருந்தது உண்மைதான். பரிசோதனைக்குப் பிறகு அவருக்கு தலைசுற்றல் (Dizziness) ஏற்பட்டது. தோள்பட்டை காயத்திற்கு ஐஸ் வைக்கப்பட்டாலும், அவர் உடல்நிலை சீராக இல்லை. அதனால் தான் ஸ்கேன் செய்ய அழைத்துச் சென்றோம்."

மேலும், இந்த முடிவை நடுவர்களே எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். "நாங்கள் கோரிக்கை வைத்தோம், ஆனால் இறுதி முடிவு மேட்ச் ரெப்ரி மற்றும் நடுவர்களுடையது. அவர்கள் ஷர்துல் தாக்கூரை அனுமதித்தனர். சாண்ட்னரின் பேட்டிங் திறமைக்கு ஈடாக ஷர்துல் கருதப்பட்டது அவருக்கு ஏமாற்றமாக இருக்கலாம், ஆனால் விதிமுறை இதுதான்" என்றார் ஜெயவர்த்தனே.

சதமடித்த சஞ்சு சாம்சன்.. சரிந்த மும்பை!

சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, ஆட்டத்தில் சிஎஸ்கே முழு ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, தனது தொடக்க வீரரின் அதிரடி சதம் மூலம் 207 ரன்கள் குவித்தது.

208 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கேவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 104 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன மும்பை, 103 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்தத் தோல்வி 2026 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. அதே சமயம், சாண்ட்னர் - ஷர்துல் மாற்றம் குறித்த விவாதம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Embed widget