மேலும் அறிய

IPL 2023 CSK vs GT Final Playing XI : மீண்டும் மகுடம் சூடப்போவது எந்த அணி? இறுதிப் போட்டியின் ப்ளேயிங் லெவன் இதோ..!

IPL 2023 CSK vs GT Final Playing XI: 16வது சீசன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதவுள்ள சென்னை மற்றும் குஜராத் அணிகளின் ப்ளேயிங் லெவன் மற்றும் இம்பேக்ட் ப்ளேயர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு காணலாம்.

CSK vs GT IPL 2023: 16வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரில் மொத்தம் 70 லீக் போட்டிகள், இரண்டு குவாலிஃபையர் போட்டிகள் மற்றும் ஒரு எலிமினேட்டர் போட்டி என இதுவரை 73 ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதில் லீக் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி மட்டும் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது, இது இரு அணிகளுக்கும் ப்ளேஆஃப் சுற்றுக்குள் வருவதற்கு ஏதுவாக இருந்தது. ப்ளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகளில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று அதாவது மே 29ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியுள்ளது. மழை காரணமாக போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் வெல்லும் அணி போட்டியோடு சேர்த்து கோப்பையையும் வெல்லும். 

சென்னை vs குஜராத் 

ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் தலா நான்கு முறை மோதியுள்ளன. அதில் குஜராத் அணி மூன்று முறையும், சென்னை அணி ஒரு முறையும் வென்றுள்ளது. குறிப்பாக போட்டி நடைபெறும் இந்த மைதானத்தில் இந்த தொடரின் முதல் போட்டியில் இரு அணிகளும் மோதிக் கொண்டன. அந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளேயிங் லெவன்:

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்:

விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி 

குஜராத் டைட்டன்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள்: ஜோஷ்வா லிட்டில், ஸ்ரீகர் பாரத், சிவம் மாவி, ஒடியன் ஸ்மித், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இம்பேக்ட் ப்ளேயர்கள்:  சிவம் துபே, மிட்செல் சான்ட்னர், சுப்ரான்ஷு சேனாபதி, ஷேக் ரஷீத், ஆகாஷ் சிங்.

போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு CSK vs GT IPL 2023 Final LIVE Score: மீண்டும் கோப்பையை வெல்லப்போவது யார்? சென்னையா? குஜராத்தா? 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
Embed widget