CSK vs GT IPL 2023 Final: ஐ.பி.எல் வரலாறு.. ஆதிக்கம் செலுத்தும் குஜராத்.. கோப்பையை தட்டித்தூக்குமா சென்னை?
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ள நிலையில், முந்தைய போட்டிகளின் முடிவுகளை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ள நிலையில், முந்தைய போட்டிகளின் முடிவுகளை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் இறுதிப்போட்டி:
பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் கடந்த 50 நாட்களுக்கும்m மேலாக நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 70 லீக் போட்டிகள் மற்றும் 3 பிளே-ஆஃப் சுற்று போட்டிகளுக்குப் பிறகு, இன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டி, மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதன் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
சாதிக்கப்போவது யார்?
இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால், அதிகமுறை ஐபிஎல் கோப்பயை வெற்றி பெற்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்யும். அதேநேரம், குஜராத் அணி வெற்றி பெற்றால், ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் மும்பை அணிகளை தொடர்ந்து, கோப்பையை தக்க வைத்த மூன்றாவது அணி என்ற பெருமையை பெறும். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில், யார் கை ஓங்கியுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
தொடரும் குஜராத் ஆதிக்கம்:
ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு அறிமுகமான குஜராத் அணியுடன் சென்னை அணி இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 3 முறை குஜராத் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த குவாலிபையர்-1 போட்டியில் தான் முதன்முறையாக குஜராத் அணியை சென்னை வீழ்த்தியது.
நேருக்கு நேர்:
குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 182
சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 178
குஜராத் அணிக்கு எதிராக சென்னை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 137
சென்னை அணிக்கு எதிராக குஜராத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 133
முதலில் பேட்டிங் செய்து வெற்றி - 1 முறை
இரண்டாவது பேட்டிங் செய்து வெற்றி - 3 முறை
தனிநபர் சாதனைகள்:
சென்னை அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் - ருத்ராத் கெய்க்வாட், 278 ரன்கள்
குஜராத் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் - சுப்மன் கில், 123 ரன்கள்
சென்னை அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் - தீக்ஷனா, 4 விக்கெட்கள்
குஜராத் அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் - முகமது ஷமி, 7 விக்கெட்கள்
மைதான விவரம்:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இதுவரை 23 ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 10 முறையும், சேஸ் செய்த அணிகள் 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன.