CSK vs DC: மீண்டும் CSK-வுக்கு கேப்டனாகும் தோனி? காயத்தில் தவிக்கும் ருதுராஜ்.. டெல்லியுடன் நாளை மோதல்!
CSK vs DC IPL 2025:ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் துஷார் தேஷ்பாண்டே பந்து வீச்சில் ருதுராஜ் கைகளில் காயம் ஏற்பட்டது.

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எம்எஸ் தோனி வழிநடத்த வாய்ப்புள்ளது என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்தார்.
ருதுராஜ் காயம்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் துஷார் தேஷ்பாண்டே பந்து வீச்சில் ருதுராஜ் கைகளில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த போட்டியில் மிகுந்த வலியால் ருதுராஜ் துடித்தார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையில் பேட்டிங்கை தொடங்கி அரைசதம் அடித்தார். இருப்பினும் அந்த போட்டியில் வலியுடன் அவர் பேட்டிங் செய்ததை காண முடிந்தது.
Mike Hussey about Ruturaj Gaikwad recovery :
— 🎰 (@StanMSD) April 4, 2025
"He's going to try and have a bat today for training. And, yeah, it's still a little bit sore, but it's improving every day. so, we're very hopeful, very confident that he'll be fine for tomorrow." pic.twitter.com/G7CFpGX1AZ
சிஎஸ்கே கேப்டன் தோனி?
இந்த நிலையில் ருதுராஜின் காயம் குறித்து பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவிக்கையில் "நாளைய ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்பது அவர் எவ்வளவு குணமடைந்தார் என்பதைப் பொறுத்தது. அவருக்கு இன்னும் வலி உள்ளது, இன்று அவர் வலை பயிற்சியில் எப்படி பேட்டிங் செய்கிறார் என்பது குறித்து நாங்கள் முடிவெடுப்போம். அவர் விளையாடவில்லை என்றால், யார் வழிநடத்துவார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு இளம் விக்கெட் கீப்பர் கேப்டனாக இடம்பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது," என்று செய்தியாளர் சந்திப்பின் போது ஹஸ்ஸி கூறினார்.
🚨 MS DHONI TO CAPTAIN CSK 🚨
— Johns. (@CricCrazyJohns) April 4, 2025
- Dhoni is likely to lead Chennai tomorrow as Ruturaj's participation is doubtful after he was hit on the hand against Rajasthan. [Express Sports] pic.twitter.com/vOdXHkXQrO
தோனியின் தலைமையில், CSK ஐந்து ஐபிஎல் பட்டங்களையும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் வென்றுள்ளது . 43 வயதான இவர் கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை அணியை வழிநடத்தினார் . மழை குறுக்கீடு காரணமாக மூன்று நாட்கள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. தோனியைத் தவிர சுரேஷ் ரெய்னா , ரவீந்திர ஜடேஜா மற்றும் கெய்க்வாட் மட்டுமே சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருந்துள்ளனர்.





















