மேலும் அறிய

Chinnaswamy Stadium Weather: சின்னசாமியில் வானிலை எப்படி? சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிக்கு அவ்ளோதான் போல - லேட்டஸ்ட் அப்டேட்

IPL 2025 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் மோதும் போட்டி இன்று நடக்கும் சின்னசாமி மைதானத்தில் மழை காரணமாக போட்டி ரத்தாகும் அபாயம் எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் ஆர்சிபி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மோதுகிறது. இந்த தொடரைப் பொறுத்தவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி ஏற்கனவே தொடரைவிட்டு வெளியேறிவிட்டது. 14 புள்ளிகள் பெற்ற ஆர்சிபி அணி ஏறத்தாழ தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நிச்சயம் உறுதியாகிவிடும். 

காத்திருக்கும் மழை?

இந்த நிலையில், பெங்களூரில் இன்று போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கோடை காலம்தான் என்றாலும் பெங்களூரில் வரும் 7ம் தேதி வரை மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நாளில் அங்கு 33 டிகிரி வானிலை நிலவும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் வானம் மேகமூட்டத்துடனும்,  நண்பகலுக்கு பிறகு இடிமின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு சின்னசாமி மைதானம் உள்ள பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தாலும், இன்று போட்டி நடக்கும் நேரத்தில் மழை பிரதானமாக பெய்ய வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

அவ்ளோதானா?

இதன்காரணமாக இன்றைய போட்டி திட்டமிட்ட நேரத்தில் தொடங்கப்படுவதில் சிரமம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், போட்டி தாமதமாக தொடங்கப்படுவதற்கோ அல்லது ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆடுவதற்கோ அல்லது போட்டி ரத்து செய்யப்படுவதற்கோ வாய்ப்புகள் அதிகளவு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறியதால் இந்த போட்டியின் முடிவு சிஎஸ்கே அணியை எந்தவிதத்திலும் பாதிக்காது. அதேசமயம் போட்டி நடக்காவிட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து வழங்கப்படும். அப்படி போட்டி நடக்காமல் ஆர்சிபி அணிக்கு 1 புள்ளி வழங்கப்பட்டாலும் அந்த அணி 15 புள்ளிகள் பெற்று வலுவாகவே இருக்கும். 

பழிதீர்க்கும் போட்டியா?

கடந்தாண்டு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்று ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு சுற்றுக்கு தகுதி பெற்றது. அது முதலே ஆர்சிபி - சிஎஸ்கே போட்டியை ரசிகர்கள் பலரும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி போல பார்த்து வருகின்றனர். இந்த தொடரிலும் சென்னையில் நடந்த போட்டியில் சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. 

இதனால், இன்றைய போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்களும், சிஎஸ்கே அணியை வீழ்த்த வேண்டும் என்று ஆர்சிபி ரசிகர்களும் விரும்புகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Embed widget