மேலும் அறிய

IPL 2026 CSK vs PBKS: தோனியின்றி களமிறங்கும் சிஎஸ்கே! வெற்றி வாகை சூடுமா ருதுராஜ் படை? - ஹோம் கிரவுண்ட்டில் என்ன நடக்கப்போகுது?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசனின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற முதலில் பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால், சென்னை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

முதல் போட்டியில் தோல்வி

ஐபிஎல் தொடர் ஆரம்பித்து ஒருவாரம் ஆகவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் முதல் போட்டியில் விளையாடி முடித்து உள்ள நிலையில், இரண்டாவது போட்டிக்கு தயாராகி வருகிறது. சென்னை அணி தனது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதி தோல்வியை சந்தித்தது. கவுகாத்தியில் நடந்த இந்தப் போட்டியில் பேட்டர்ஸ்கள் சரியாக விளையாடதே தோல்விக்கு காரணாமாக அமைந்தது.

சிஎஸ்கே சென்னையில் வெல்லுமா?

சிஎஸ்கே தனது இரண்டாவது போட்டியை சென்னையில் விளையாடுகிறது. சிஎஸ்கே அணியின் பலமே ஹோம் கிரவுண்ட்தான். மேலும், சென்னை ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பும் உற்சாகமும் அணி வீரர்களுக்கு அதிக உந்துதலை கொடுக்கும். அதனால், இன்றைய போட்டியில், தனது முதல் வெற்றியை ருசிக்க சிஎஸ்கே வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எது எப்படி இருந்தாலும், வீரர்கள் நன்றாக விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

தோனி இல்லாமல் கஷ்டப்படும் ருதுராஜ்

தோனி இன்னும் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டதால், அணியை வழிநடத்த ருதுராஜ் திணறுவதாக தெரிகிறது. இதனால், அவரது பேட்டிங்கிலும் அவர் கவனம் செலுத்தாமல் இருப்பதாக தெரிகிறது. முதல் போட்டியில் பெற்ற தோல்வியை, மறந்து நேர்மறை சிந்தனையுடன் அடுத்தப் போட்டிக்கு செல்வோம் என ருதுராஜ் கூறியிருப்பதால், இன்றைய போட்டியில் நன்றாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.

பஞ்சாப் கிங்க்ஸ் ஆதிக்கம் செலுத்துமா?

பஞ்சாப் கிங்ஸ் தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்திய நம்பிக்கையுடன் சென்னை அணியை எதிர்கொள்கிறது. கடந்த தொடரில் அந்த அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றவர் ஸ்ரேயாஸ் ஐயர். அவருடன் சேர்த்து மொத்த அணியும் சிஎஸ்கேவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முழு திறமையையும் வெளிக்காட்டுவார்கள் என்பதால் போட்டியில் அனல்பறக்கப்போகிறது.
 
அணி விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, சர்பராஸ் கான், பிரசாந்த் வீர், ஷிவம் துபே, கார்த்திக் சர்மா,  நூர் அகமது, மேட் ஹென்றி, அன்சுல் கம்போஜ், கலீல் அகமது.

பஞ்சாப் கிங்ஸ்

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங் , பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கோனோலி, நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக்/ஹர்பிரீத் பிரார், யுஸ்வேந்திர சாஹல்.

தலைப்பு செய்திகள்

DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Embed widget