மேலும் அறிய

IPL 2025:ஐபிஎல் ரீடெய்ன்; யார் உள்ளே? யார் வெளியே?முழு லிஸ்ட் இதோ

ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இன்று (அக்டோபர் 31) ஐபிஎல் ரீடெய்ன் நடைபெற்றது. இதில், ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்கவைத்த வீரர்கள் தொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 31) ஐபிஎல் ரீடெய்ன் நடைபெற்றது. இதில், ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்கவைத்த வீரர்கள் தொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. யார் யார் எந்த அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். யார் யார் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான தகவலை இங்கே பார்ப்போம்:

ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைகக முடியும். 6 வீரர்கள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வீரர்களாகவும் இருக்கலாம். அதிகபட்சம் 2 Uncapped வீரராகவும், 5 சர்வதேச வீரர்களையும் தக்க வைத்து கொள்ளலாம். முதல் வீரருக்கு 18 கோடி ரூபாய், 2வது வீரருக்கு 14 கோடி ரூபாய், 3வது வீரருக்கு 11 கோடி ரூபாய், 4வது வீரருக்கு 18 கோடி ரூபாயும், 5வது வீரருக்கு 14 கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். அதிகபட்சமாக 75 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய கூடாது. 75 கோடி ரூபாய் தாண்டாத வகையில், வீரர்களுக்கு சம்பளத்தை மாற்றி வழங்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் (18 கோடி), மதீஷா பத்திரனா ( 13 கோடி), சிவம் துபே ( 12 கோடி), ரவீந்திர ஜடேஜா (18 கோடி), எம்.எஸ்.தோனி (4 கோடி) தக்கவைத்துள்ளது. டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை சென்னை அணி விடுவித்துள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அக்சர் படேல் (16.50 கோடி), குல்தீப் யாதவ் (13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (10 கோடி), அபிஷேக் போரல் ( 4 கோடி) தக்கவைத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டேவிட் வார்னர், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரையும் தக்கவைக்கவில்லை.

குஜராத் டைட்டன்ஸ்:

குஜராத் டைட்டன்ஸ் அணி ரஷித் கான் (18 கோடி), சுப்மான் கில் (16.50 கோடி), சாய் சுதர்சன் (8.50 கோடி), ராகுல் டெவாடியா (4 கோடி), ஷாருக் கான் (4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.முகமது ஷமி, டேவிட் மில்லர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரிங்கு சிங் ( 13 கோடி), வருண் சக்ரவர்த்தி (12 கோடி), சுனில் நரைன் (12 கோடி), ஆண்ட்ரே ரசல் (12 கோடி), ஹர்ஷித் ராணா (4 கோடி), ராமந்தீப் சிங் (4 கோடி) தக்கவைத்துள்ளது. ஐபிஎல் சீசன் 17 கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் உட்பட மிட்செல் ஸ்டார்க், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா ஆகியோரை விடுவித்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிக்கோலஸ் பூரன் (21 கோடி), ரவி பிஷ்னோய் (11 கோடி) மயங்க் யாதவ் (11 கோடி), மொஹ்சின் கான் (4 கோடி), ஆயுஷ் படோனி (4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் உட்பட மார்கஸ் ஸ்டோனிஸ், குயின்டன் டி காக், க்ருனால் பாண்டியா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்பிரித் பும்ரா (18 கோடி), சூர்யகுமார் யாதவ் (16.35 கோடி), ஹர்திக் பாண்டியா ( 16.35 கோடி), ரோஹித் ஷர்மா (16.30 கோடி), திலக் வர்மா (8 கோடி) தக்கவைத்துள்ளது. இஷான் கிஷன், டிம் டேவிட் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ்:

பஞ்சாப் கிங்ஸ் அணி ஷஷாங்க் சிங் ( 5.5 கோடி), பிரப்சிம்ரன் சிங் (4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், சாம் கர்ரன், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலி ( 21 கோடி), ரஜத் படிதார் (11 கோடி), யாஷ் தயாள் (5 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.  கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ், கேமரூன் கிரீன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் (18 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (18 கோடி), ரியான் பராக் ( 14 கோடி), துருவ் ஜூரெல் (14 கோடி), ஷிம்ரோன் ஹெட்மேயர் (11 கோடி), சந்தீப் சர்மா (4 கோடி) தக்கவைத்துள்ளது. யுஸ்வேந்திர சாஹல், ஜோஸ் பட்லர், டிரெண்ட் போல்ட், ஆர் அஷ்வின் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

சன் ரைசர்ஸ் ஹைதராபாத ஹென்ரிச் கிளாசென் (23 கோடி), பாட் கம்மின்ஸ் (18 கோடி), அபிஷேக் சர்மா ( 14 கோடி), டிராவிஸ் ஹெட் (14 கோடி), நிதிஷ் குமார் ரெட்டி ( 6 கோடி) தக்கவைக்கப்பட்டுள்ளனர்.வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், புவனேஷ்வர் குமார் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT: 10 ஆண்டுகால கோரிக்கை.. 47013 குடும்பங்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை பணிகள் நிரந்தரம்
TN GOVT: 10 ஆண்டுகால கோரிக்கை.. 47013 குடும்பங்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை பணிகள் நிரந்தரம்
TN Fishermen: என்று தணியும் இந்த கொடுமை? மீனவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, 13 பேர் கைது
TN Fishermen: என்று தணியும் இந்த கொடுமை? மீனவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, 13 பேர் கைது
IND Vs ENG 3rd T20:  டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? இங்கிலாந்து போராடுமா? ராஜ்கோட்டில் இன்று 3வது டி20 போட்டி
IND Vs ENG 3rd T20: டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? இங்கிலாந்து போராடுமா? ராஜ்கோட்டில் இன்று 3வது டி20 போட்டி
IPL 2025: 14வது ஆண்டில் முதல் கோப்பை! RCB-யும் வரலாறு படைக்குமா? ஏக்கத்தில் ரசிகர்கள்
IPL 2025: 14வது ஆண்டில் முதல் கோப்பை! RCB-யும் வரலாறு படைக்குமா? ஏக்கத்தில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Nainar Nagendran | ”மோதி பாக்கலாம் வா”அ.மலை Vs நயினார்! தமிழக பாஜக தலைவர் யார்? | BJPSaif Ali Khan Attacker | ’’கல்யாணம் நின்னு போச்சு..’’போலீசால் கதறும் நபர் சைஃப் அலிகான் விவகாரம் | Akash KanojiaNitish Kumar Son Nishant Political Entry | மகனின் திடீர் அரசியல் ஆசைநிதிஷ் போடும் கணக்கு நெருக்கடியில் பாஜகDurai Murugan  | கண்டுகொள்ளாத திமுக தலைமை?வருத்தத்தில் துரைமுருகன்! மகன் கதிர் ஆனந்தின் எதிர்காலம்? | Kathir Anand

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT: 10 ஆண்டுகால கோரிக்கை.. 47013 குடும்பங்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை பணிகள் நிரந்தரம்
TN GOVT: 10 ஆண்டுகால கோரிக்கை.. 47013 குடும்பங்களின் வயிற்றில் பாலை வார்த்த தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை பணிகள் நிரந்தரம்
TN Fishermen: என்று தணியும் இந்த கொடுமை? மீனவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, 13 பேர் கைது
TN Fishermen: என்று தணியும் இந்த கொடுமை? மீனவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, 13 பேர் கைது
IND Vs ENG 3rd T20:  டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? இங்கிலாந்து போராடுமா? ராஜ்கோட்டில் இன்று 3வது டி20 போட்டி
IND Vs ENG 3rd T20: டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? இங்கிலாந்து போராடுமா? ராஜ்கோட்டில் இன்று 3வது டி20 போட்டி
IPL 2025: 14வது ஆண்டில் முதல் கோப்பை! RCB-யும் வரலாறு படைக்குமா? ஏக்கத்தில் ரசிகர்கள்
IPL 2025: 14வது ஆண்டில் முதல் கோப்பை! RCB-யும் வரலாறு படைக்குமா? ஏக்கத்தில் ரசிகர்கள்
WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை  - எந்த ரூட் தெரியுமா?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை - எந்த ரூட் தெரியுமா?
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
EPS Condemn: 'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
Embed widget